பாரிசில் ஒரு பிரமிட் கோபுரம்

பாரிசில் ஒரு பிரமிட் கோபுரம்

1 mins read
f917024a-8168-46ce-8249-2bf051680cc5
சுமார் 180 மீட்டர் உயரத்தில் கட்டப்பட உள்ள முக்கோண கோபுரத்தின் சித்திரம். பாரிஸ் நகரத்தின் தோற்றத்தையே இந்தக் கட்டடம் மாற்றும் என்று கூறப்படுகிறது. படம்: சவுத் சைனா மார்னிங் போஸ்ட் -

சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பையும் மீறி, 42 மாடிகள் கொண்ட 'பிரமிட்' வடிவ வானளாவிய கட்டடத்தின் கட்டுமானம் பாரிஸில் வியாழன் (பிப்ரவரி 10) அன்று தொடங்கியது.

பாரிஸ் நகரின் தென்மேற்குக் கோடியில், 15வது மாவட்டத்தில் உள்ள முக்கோண கோபுரம் (சுற்றுலா முக்கோணம்), 180 மீட்டர் உயரத்தில் கட்டப்பட உள்ளது.

1889ல் கட்டி முடிக்கப்பட்ட ஈஃபிள் கோபுரம், 1973ல் திறக்கப்பட்ட 'மாண்ட்பர்னாஸ்' கோபுரம் (Montparnasse Tower) ஆகியவற்றுக்கு அடுத்து நகரின் மூன்றாவது மிக உயர்ந்த கட்டடமாக இது அமையவுள்ளது.

வரலாற்றுச் சிறப்பைப் பேணுவதில் பெருமைகொள்ளும் நகரமான பாரிஸ்.

அதன் உட்புறப் பகுதிகளில் உயரமான கட்டடங்கள் அரிதாகவே காணப்படுகின்றன.

சுவிஸ் நாட்டுக் கட்டடக்கலை நிபுணர்களான ஹெர்சாக், மியூரான் ஆகியவர்களால் வடிவமைக்கப்பட்டது இந்த முக்கோணக் கோபுரம்.

US$755 மில்லியன் (S$1.01 பில்லியன்) செலவில், 2026ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படவுள்ள என மேம்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வானளாவிய இந்த கட்டடத்திற்கான திட்டம் முதன்முதலில் 2008ல் தொடங்கப்பட்டது.

பின்னர் 2015ம் ஆண்டு, பாரிஸ் நகர மேயர் அன்னே ஹிடால்கோ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.