ஐந்து வயதுக்குகீழ் உள்ள பிள்ளைகளுக்குத் தடுப்பூசி

வா‌ஷிங்­டன்: ஐந்து வய­துக்­குகீழ் உள்ள பிள்­ளை­க­ளுக்கு வரும் 21ஆம் தேதி முதல் கொவிட்-19 தடுப்­பூசி போடு­வ­தற்கு அமெ­ரிக்கா திட்­ட­மிட்டு வரு­வ­தாக அந்­நாட்­டின் நோய் கட்­டுப்­பாட்டு, தடுப்பு மையத்­தின் ஆவ­ணம் ஒன்று கூறு­கிறது.

இரண்டு முதல் நான்கு வயது பிள்­ளை­க­ளி­டம் இதற்­கான மருத்­து­வப் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­ட­போது, அவர்­க­ளுக்கு

3 மைக்­ரோ­கி­ராம் அளவு தடுப்­பூசி போடப்­பட்­டது. அதில் ஃபைசர்-பயோ­என்­டெக் நிறு­வ­னத்­தின் தடுப்­பூசி பரி­சோ­த­னைக்­கான முக்­கிய இலக்கை எட்­ட­வில்லை.

இருப்­பி­னும், அத்­த­டுப்­பூ­சிக்கு அங்­கீ­கா­ரம் அளிப்­பது குறித்து அமெ­ரிக்­கா­வின் உணவு, மருந்து நிர்­வா­கம் பரி­சீ­லித்து வரு­கிறது.

உணவு, மருந்து நிர்­வா­கம் கேட்­ட­படி அங்­கீ­கா­ரம் அளிப்­ப­தற்­குத் தேவை­யான கூடு­தல் தக­வல்­களைச் சமர்ப்­பித்­துள்­ள­தாக மருந்து நிறு­வ­னம் கூறி­யது.

அங்­கீ­கா­ரம் அளிக்க பரிந்­து­ரைப்­பது பற்றி கலந்­தா­லோ­சிக்க உணவு, மருந்து நிர்­வா­கத்­தின் ஆலோ­ச­கர்­கள் வரும் 15ஆம் தேதி கூடு­கின்­ற­னர்.

அதன் பிற­கு­ ஒரு வாரத்­திற்குள் பிள்­ளை­க­ளுக்­குத் தடுப்­பூசி போடும் பணி தொடங்­கும் என்று எதிர்­பார்க்கப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, முதல்­கட்­ட­மாக இம்­மாத இறு­திக்­குள் மாநி­லங்­களுக்கு 10 மில்­லி­யன் தடுப்­பூ­சி­களை அனுப்ப அமெ­ரிக்க அர­சாங்­கம் திட்­ட­மிட்டு வரு­வ­தா­க­வும் அந்த ஆவ­ணம் கூறு­கிறது.

அடுத்­த­ கட்­ட­மாக பிப்­ர­வரி 23, 25ஆம் தேதி­களில் மேலும் தடுப்­பூ­சி­கள் விநி­யோ­கிக்­கப்­படும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

அமெ­ரிக்­கா­வில் 18 மில்­லி­யன் பிள்­ளை­கள் ஆறு முதல் நான்கு வய­துக்­குட்­பட்­ட­வர்­கள் என்­றும் அவர்­களில் எளி­தில் தொற்­றுக்கு ஆளா­கும் அபா­யம் உள்­ள­வர்­களுக்குத் தடுப்­பூசி போடு­வ­தில் முன்­னு­ரிமை அளிக்­கப்­படும் என்­றும் மையம் கூறி­யது.

பெரி­ய­வர்­க­ளுக்கு 30 மைக்­ரோ­கி­ராம் அள­வும் ஐந்து முதல் 11 வய­துக்­குட்பட்ட பிள்­ளை­க­ளுக்கு 10 மைக்­ரோ­கி­ராம் அள­வுக்­கும் தடுப்­பூசி போடப்­பட்­டது.

இதற்­கி­டையே, ஓமிக்­ரான் கிரு­மிக்கு எதி­ரான போராட்­டத்­தில் நான்­கா­வது தவணை தடுப்­பூசி தேவைப்­ப­டக்­கூ­டும் என்று அமெ­ரிக்க தலைமை மருத்­துவ ஆலோ­ச­கர் ஆண்­டனி ஃபௌசி கூறி­யுள்­ளார்.

அது, குறிப்­பிட்ட நப­ரின் வயது அடிப்­ப­டை­யிலும் நாள்­பட்ட நோய்­களின் அடிப்­ப­டை­யிலும் இருக்கும் என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!