தாய்லாந்தில் மீண்டும் எண்ணெய் கசிவு

தாய்லாந்தில் மீண்டும் எண்ணெய் கசிவு

1 mins read
3e31f6a6-4e81-45f6-b01e-edc331e7cd9b
-

பேங்காக்: இரண்டு வாரங்களுக்கு முன்பு எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட அதே நிறுவனத்தின் குழாயில் நேற்று மீண்டும் 5,000 லிட்டர் எண்ணெய்க் கசிந்தது.

எண்ணெய்க் கசிவை சரி செய்வதற்கான முயற்சியில் எஸ்பிஆர்சி எண்ணெய் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

முந்திய எண்ணெய்க் கசிவால் ரேயாங் கடற்கரை பகுதி மாசடைந்தது. அப்போது, 47,000 முதல் 55,000 லிட்டர் எண்ணெய்க் கடலில் பரவியது.