கொள்ளைநோய் முடிந்துவிட்டதாக கட்டுப்பாடுகளை நீக்கியது சுவீடன்

கொள்ளைநோய் முடிந்துவிட்டதாக கட்டுப்பாடுகளை நீக்கியது சுவீடன்

1 mins read
a6512d7b-8726-401a-bab6-d68bc8102f93
-

ஸ்டாக்­ஹோம்: எஞ்­சி­யி­ருந்த சில கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளை­யும் கைவிட்­டு­விட்­டது சுவீ­டன்.

கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான போராட்­டத்­தில் பொறுமை வேண்­டும் என்று ஆராய்ச்­சி­யா­ளர்­கள் கூறும்­போ­தி­லும் சுகா­தார கட்டமைப்­பின் மீதான நெருக்­கடி அதி­க­மாக உள்ள நிலை­யி­லும் அந்­நாடு கிரு­மித்­தொற்று பரி­சோ­த­னை­யை­யும் நிறுத்­தி­யுள்­ளது.

அங்கு எத்­தனை பேர் தொற்­றுக்கு ஆளா­கி­யி­ருக்­கி­றார்­கள் என்­பது தெரி­யாது.

பரி­சோ­த­னை­யால் ஏற்­படும் நன்மை­க­ளோடு ஒப்­பி­டும்­போது பரி­சோ­த­னைக்­காக செல­வி­டப்­படும் தொகை மிக­வும் அதி­கம் என்று சுவீ­டன் சுகா­தார அமைச்சு கூறி­யது.

"கொள்­ளை­நோய் முடிந்­து­விட்­டது என்றே கூறு­வேன்," என்­றார் சுகா­தார அமைச்­சர் லீனா ஹாலெங்க்­ரென். இனி கொவிட்-19 ஆபத்­தான நோயாக வகைப்­படுத்தப்­ப­டாது என்­றும் அவர் கூறி­னார்.

இனி அங்கு, வர்த்­த­கங்­கள் இரவு 11 மணிக்­குப் பிற­கும் செயல்­படும். ஒன்­று­கூ­டு­வோர் எண்­ணிக்­கை­யிலும் கட்­டுப்­பா­டு­கள் எது­வும் இல்லை.