வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி

வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி

1 mins read
4796c875-8cfe-4473-8737-e8be300ba3fb
-

மணிலா: பிலிப்­பீன்ஸ் நேற்று முதல், தடுப்­பூசி போட்­டுக் கொண்ட வெளி­நாட்­டுப் பய­ணி­கள் தனி­மைப்­ப­டுத்­தல் இல்­லா­மல் தங்­கள் நாட்­டிற்­குள் நுழைய அனு­ம­தித்­துள்­ளது.

அத்­து­டன் தொற்­றுச் சம்­ப­வங்­களின் அடிப்­ப­டை­யில், நாடு­களை வகைப்­ப­டுத்­து­வ­தை­யும் பிலிப்­பீன்ஸ் கைவிட்­டுள்­ளது.

சுற்­று­லாத் துறை­யைப் பெரி­தும் நம்­பி­யி­ருக்­கும் பிலிப்­பீன்­சின் பொரு­ளா­தா­ரம் மீட்சி பெறு­வ­தற்கு இது உத­வும் என்­கிறது பிலிப்­பீன்ஸ்.

இதற்­கி­டையே, தலை­ந­கர் மணி­லா­வில் கிரு­மித்­தொற்று அபாய எச்­ச­ரிக்கையை ஆக குறைந்த நிலைக்கு கீழி­றக்­கு­வது குறித்­தும் அந்­நாடு பரி­சீ­லித்து வரு­கிறது.

அபாய எச்­ச­ரிக்கை குறைக்­கப்­பட்­டால் தொழிற்­சா­லை­கள் முழு­வீச்­சில் செயல்­படத் தொடங்­கும். மணி­லா­வில் தொற்­றுக்கு ஆளா­வோர் தின­சரி எண்­ணிக்கை 1,000த்திற்­கும்கீழ் குறைந்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது. சென்ற மாதம் அது 11,000ஆக இருந்­தது. தொற்று உறுதி செய்­யப்­ப­டு­வோர் விகி­த­மும் 15 விழுக்­காட்­டில் இருந்து 9.1 விழுக்­கா­டாக குறைந்­துள்­ளது.

ஏற்­கெ­னவே 500 பள்­ளிக்­கூ­டங்­கள் நேரடி கல்­வி­மு­றை­யைத் தொடங்­கி­யுள்ள நிலை­யில், மேலும் 6,000 பள்­ளிக்­கூ­டங்­களை மீண்­டும் திறப்­பது குறித்­தும் பிலிப்­பீன்ஸ் ஆராய்ந்து வரு­கிறது.