நோயாளிகளைச் சமாளிக்க முடியாமல் திணறும் நாடுகள்

நோயாளிகளைச் சமாளிக்க முடியாமல் திணறும் நாடுகள்

1 mins read
d343288b-1001-4332-ac4d-f3fbb9f73c52
கிருமித்தொற்று பரிசோதனைக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த ஹாங்காங் மக்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

ஹாங்­காங்: ஹாங்­காங், வியட்­னாம், ஜப்­பான், தென் கொரியா ஆகிய நாடு­களில் தொற்­றுச் சம்­ப­வங்­கள் பெரு­ம­ளவு அதி­க­ரித்­துள்­ளன. இத­னால் நிரம்பி வழி­யும் மருத்­து­வ­மனை­கள் நோயா­ளி­க­ளைச் சமா­ளிக்க முடி­யா­மல் திண­று­கின்­றன.

ஹாங்­காங்­கில் புதன்­கி­ழ­மை­யன்று ஆக அதி­க­மாக 1,161 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­னர். அதா­வது, பிப்­ர­வரி 1ஆம் தேதிக்­குப் பிறகு தொற்­றுச் சம்­ப­வங்­கள் 10 மடங்கு அதி­க­ரித்­துள்­ளது.

இத­னால், கிரு­மித்­தொற்று பரி­சோ­த­னைக்­கா­க­வும் தனி­மைப்­படுத்­தல் மையத்­தில் அனு­ம­திக்­கப்­ப­டு­வதற்­கா­க­வும் அந்­நாட்டு மக்­கள் நீண்டநேரம் காத்­தி­ருக்க வேண்­டி­யி­ருந்­தது. இது­கு­றித்து தான் மிகவும் வருந்­து­வ­தாக ஹாங்­காங் தலைமை நிர்­வாகி கேரி லாம் சொன்­னார். மார்ச் மாத இறு­தி­யில் அந்­நாடு நாளொன்­றுக்கு ஏறத்­தாழ 28,000 தொற்­றுச் சம்­ப­வங்­களை எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கும் என்று எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

தென்­கொ­ரி­யா­வி­லும் கிருமி தொற்­றி­யோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தால், சுய சிகிச்சை முறையை அந்­நாடு அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதன்­படி, நேற்று முதல், 60, அதற்­கும் மேற்­பட்ட வய­து­டைய கொவிட்-19 நோயா­ளி­களை மட்­டுமே மருத்­துவ ஊழி­யர்­கள் கவ­னிப்­பார்­கள்.

மற்­ற­வர்­கள் தங்­க­ளைக் கண்­கா­ணித்­துக்­கொள்ள வேண்­டும் என்­றும் நிலைமை மோச­ம­டைந்­தால் அவர்­கள் மருந்­த­கங்­களில் சிகிச்­சைக்குச் செல்­ல­வேண்­டும் என்றும் கூறப்­பட்­டுள்­ளது.

வியட்­னா­மில் சென்ற வாரம் 15,000மாக இருந்த தொற்­றுச் சம்­ப­வங்­கள், நேற்று 24,000ஆக பதி­வா­னது. அர­சாங்க மருத்­து­வ­ம­னை­களில் நோயா­ளி­க­ளைச் சமா­ளிக்க முடி­யாத நிலை­யில், தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளின் உத­வியை நாடி­யுள்­ளது அர­சாங்­கம்.

ஜப்­பா­னில் தொற்று உச்­ச­ம­டைந்­துள்­ள­தாக கூறப்­படும் நிலை­யில், அங்கு கட்­டுப்­பா­டு­கள் அடுத்த மாதம் வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.