'பாமாயில் கிடைப்பது தங்கம் வாங்குவதைப் போன்றுள்ளது'

1 mins read
1637a762-9ce7-497b-b83a-d2f469ceaf6b
-

ஜகார்த்தா: 'பாமா­யில்' எனும் செம்­பனை எண்­ணெய் ஏற்­று­ம­தி­யில் உல­கின் ஆகப்­பெ­ரிய நாடான இந்­தோ­னீ­சி­யா­வில், சென்ற ஆண்டு நவம்­பர் மாதம் முதல் பாமா­யில் எண்­ணெய் கிடைப்­ப­தில் தட்­டுப்­பாடு நில­வு­கிறது.

அனைத்­து­ல­கச் சந்­தை­யில் பொருள்­க­ளின் விலை உயர்­வுக்கு மத்­தி­யில் உள்­ளூர்­வா­சி­கள் அதிக பாமா­யிலை வெளி­நா­டு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­கின்­ற­னர்.

அத்­து­டன் பயோ­டீ­சல் உற்­பத்­திக்­கும் பாமா­யில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

எனவே, உள்­ளூர் சந்­தை­யில் பாமா­யில் எண்­ணெய்க்­குத் தட்டுப்­பாட்டு ஏற்­பட்­டுள்­ளது.

ஒரு லிட்­டர் எண்­ணெய் 20,000 ரூப்­பி­யா­வாக உயர்ந்­துள்­ள­தாக சொன்­னார் எண்­ணெய்ப் பல­கார விற்­ப­னை­யா­ளர் ஒரு­வர்.

ஒரு­வ­ருக்கு 2 லிட்­டர் எண்­ணெய் மட்­டுமே விற்க கடை­களில் கட்­டுப்­பா­டு­கள் உள்­ள­தாக சொன்ன குடும்­பத் தலைவி ஒரு­வர், "பாமா­யில் எண்­ணெய் கிடைப்­பது இப்­போது தங்­கத்தை வாங்­கு­வ­தைப் போன்­றுள்­ளது," என்­றார்.