விமானத்தில் 'பறந்த' பாம்பு; மாறிப்போன பயணம்

விமானத்தில் 'பறந்த' பாம்பு; மாறிப்போன பயணம்

1 mins read
2b7ac016-5ac2-4578-8f55-483a61c360f4
-

கோத்தா கின­பாலு: நடு­வா­னில் பறந்­து­கொண்­டி­ருந்த விமா­னத்­தில் உடை­மை­கள் வைக்­கப்­படும் இடத்­தில் இருந்த பாம்பு அனை­வ­ரை­யும் திடுக்­கிட வைத்­தது.

கோலா­லம்­பூ­ரி­லி­ருந்து சாபா மாநி­லத்­தின் தவாவ் நக­ரம் நோக்கி பய­ணம் செய்­து­கொண்­டி­ருந்த ஏர் ஏஷியா விமா­னம் இதன் கார­ண­மாக பாதி­யி­லேயே தரை­யி­றங்­கி­யது.

விமா­னத்­தில் உடை­மை­கள் வைக்­கப்­படும் பகு­தி­யில் பாம்­பின் உரு­வம் தென்­படும் காட்­சி­கள் சமூக ஊட­கங்­களில் பர­வ­லா­கப் பகிர்ந்­து கொள்­ளப்­பட்­டன.

பய­ணி­க­ளின் பாது­காப்­பைக் கருதி, விமா­னம் தவாவ் நக­ருக்­குச் செல்­லா­மல், கூச்­சிங்­குக்­குத் திசை திருப்­பப்பட்­ட­தாக ஏர் ஏ‌ஷியா நிறு­வ­னம் கூறி­யது.

விமா­னத்­தில் புகை­மூட்டி பாம்பை பிடிப்­ப­தற்கு ஏது­வாக, விமா­னத்தை உட­ன­டி­யாக கூச்­சிங்­கில் தரை­யி­றக்க விமானி முடிவு செய்­த­தாக ஏர் ஏஷியா நிறு­வ­னம் விளக்­கி­யது.

பய­ணி­கள் வேறு விமா­னத்­தின் மூலம் தங்­கள் பய­ணத்­தைத் தொடர்ந்­ததா­க­வும் ஏர் ஏஷியா கூறி­யது. இது­போன்ற சம்­ப­வங்­கள் மிக அரிது என்று நிறு­வ­னம் சொன்­னது.