சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 11) நிலவரப்படி தொற்றுப் பாதிப்பால் மொத்தம் 1,205 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் 21 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
மருத்துவமனைகளில் கொவிட்-19 தொற்றால் பாதிப்புக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஏழாவது நாளாக ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் 128 பேருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரில் அன்றாட கொவிட்-19 தொற்று எண்ணிக்கை நேற்று சற்று குறைந்து 9,771ஆக உள்ளது.
ஒப்புநோக்க வியாழக்கிழமை, இந்த எண்ணிக்கை 10,542ஆக இருந்தது.
கொவிட்-19 தொற்றால் மேலும் மூவர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 159 பேருக்குத் தொற்று உறுதியானது.
வாராந்திர தொற்றுப் பரவல் விகிதம் வெள்ளிக்கிழமை அன்று 1.74 ஆக இருந்தது. அதற்கு முந்தைய நாள் அது 2.26 ஆக இருந்தது.

