கொவிட்-19 விதிமீறல்: 9 கடைகளின் உரிமம் பறிப்பு

கொவிட்-19 விதிமீறல்: 9 கடைகளின் உரிமம் பறிப்பு

1 mins read
5eabd5a3-928e-4799-b852-ad50843398f9
உரிமங்களை இழந்த சில கடைகள்(படங்கள்: MSE.GOV.SG, சாவ்பாவ், சிங்கப்பூர் பயணத்தறை வாரியம்) -

கொவிட்-19 கட்டுப்பாடுகளை மீறிய 9 உணவு பானக் கடைகளின் மதுபான உரிமம் பறிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் நான்கு கடைகளின் பொது கேளிக்கை உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்ற தவறியதால் உரிமங்கள் பறிக்கப்பட்டதாக சிங்கப்பூர்க் காவல் துறை கூறியது.

அதோடு இரவு 10.30 மணிக்கு மேல் இக்கடைகளில் மது விற்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

உரிமம் பறிக்கப்பட்ட 9 கடைகள்:

  1. ஸ்டிம்மாவ் உணவகம் (பீச் ரோடு)
  2. பஸ் மதுபான விடுதி (டேல்ஹாவ்சி லேன்)
  3. ஹாரு பார் (மெகஸின் ரோடு)
  4. ஓம்ஸ் கார்டன் (சந்தர் ரோடு)
  5. டார்ட்ஸ் லெஜண்ட் (மீடியா சர்க்கில்)
  6. தி ஐடில் (மீடியா சர்க்கில்)
  7. எம்ஸிஎஸ் ஃபேமலி கேடிவி (காஸ்கேடன் ரோடு)
  8. ஹெச்.ஒ.எம் (காஸ்கேடன் ரோடில் உள்ள இரண்டு கிளைகள்)

கொவிட்-19 விதி­மு­றை­களை மீறு­வோ­ருக்கு ஆறு மாதங்­கள் வரை சிறைத் தண்­டனை, $10,000 வரை அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.