கிரைமியா அருகில் போர்ப் பயிற்சியில் ஈடுபடும் ரஷ்யா

கிரைமியா அருகில் போர்ப் பயிற்சியில் ஈடுபடும் ரஷ்யா

2 mins read
5dbc97d1-8e36-44de-84a6-b3f92054504d
-

மாஸ்கோ: கிரை­மியா தீப­கற்­பத்­துக்கு அரு­கில் ரஷ்­யா­வின் கடற்­

ப­டை­யைச் சேர்ந்த 30க்கும் மேற்­பட்ட போர்க் கப்­பல்­கள் போர்ப் பயிற்­சி­யில் ஈடு­ப­டத் தொடங்­கி­­இருப்­ப­தாக ரஷ்ய ஊட­கம் நேற்று தெரி­வித்­தது. 2014ஆம் ஆண்­டில் உக்­ரே­னி­ட­மி­ருந்து கிரை­மி­யாவை ரஷ்யா கைப்­பற்­றி­யது.

உக்­ரே­னில் எந்­நே­ர­மும் போர் வெடிக்­கக்­கூ­டும் என்று மேற்­கத்­திய நாடு­கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ள நிலை­யில் ரஷ்யக் கடற்­படை போர்ப் பயிற்­சி­யைத் தொடங்­கி­

உள்­ளது.

உக்­ரே­னின் எல்­லை­யோ­ரம் ரஷ்யா அதன் ராணுவ வீரர்­க­ளைக் குவித்து வரும் நிலை­யில், அவர்­

க­ளது நட­மாட்­டத்தை மேற்­கத்­திய நாடு­கள் மிக உன்­னிப்­பா­கக் கண்­கா­ணித்து வரு­கின்­றன.

உக்­ரே­னைத் தாக்க திட்­டம் கொண்­டி­ருக்­க­வில்லை என்று ரஷ்யா தொடர்ந்து கூறி வரு­கிறது. நேட்டோ படைக்கு எதி­ரா­கத் தனது பாது­காப்பை வலுப்­ப­டுத்­து­வ­தாக அது தெரி­வித்­தது.

கிரை­மி­யா­வின் கட­லோ­ரப் படை­யைப் பாது­காப்­பதே இந்­தப் போர்ப் பயிற்­சி­க­ளின் இலக்கு என்று ரஷ்யா தெரி­வித்­துள்­ளது. அத்­து­டன் ரஷ்யப் பொரு­ளி­ய­லை­யும் கடற்­

ப­டை­யில் தொடர்­பு­க­ளை­யும் பாது­காக்க முயற்­சி­கள் எடுக்­கப்­ப­டு­வ­தாக அது கூறி­யது.

தனது கடற்­படை இம்­மா­த­மும் அடுத்த மாத­மும் முழு­வீச்­சு­டன் போர்ப் பயிற்­சி­யில் ஈடு­படும் என்று ரஷ்யா கடந்த மாதம் அறி­வித்­

தி­ருந்­தது.

பசி­பிக் கட­லி­லி­ருந்து அட்­லாண்­டிக் கடல் வரை போர்ப் பயிற்­சி­கள் நடத்­தப்­படும் என்று அது தெரி­வித்­தது.

இதற்­கி­டையே, அடுத்த வாரத்­துக்­குள் ரஷ்யா உக்­ரே­னைத்

தாக்­கக்­கூ­டும் அல்­லது உக்­ரே­னில் உள்­நாட்­டுப் போரை அது ஏற்­ப­டுத்த முயற்சி செய்­யக்­கூ­டும் என்று

அமெ­ரிக்கா எச்சரித்­துள்­ளது.

சீனா­வில் நடை­பெற்று வரும் பனிக்­கால ஒலிம்­பிக் போட்­டிக்­குப் பிறகு, ரஷ்யா தாக்­கு­தலை நடத்­தக்­கூ­டும் என்று பல நாடு­கள் நம்பு ­வ­தா­க­வும் அதற்கு மாறாக போட்டி­ கள் நடந்­து­கொண்­டி­ருக்­கும்­போதே போர் தொடங்­கும் சாத்­தி­யம் இருப்­ப­தா­க­வும் அமெ­ரிக்கா கூறி­யது.

இதன் கார­ண­மாக உக்­ரே­னில் இருக்­கும் தங்­கள் நாட்­டி­னரை

அங்­கி­ருந்து வெளி­யே­றும்­படி

அமெ­ரிக்­கா­வும் அதன் நட்பு நாடு­களும் கேட்­டுக்­கொண்­டுள்­ளன.

உக்ரேனில் இருக்கும் அமெரிக்கர்கள் அடுத்த 48 மணி நேரத்துக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் போர் தொடங்கிய பிறகு அமெரிக்க ராணுவம் அவர்களை அங்கிருந்து மீட்காது என்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் தெரிவித்தார்.