வின்சர்: கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்த்து கனடாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் முக்கிய வர்த்தகப் பாதையான அம்பாசடர் பாலத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து முற்றுகையிட்டு வருகின்றனர்.
முற்றுகையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று நீ்திமன்றம் நேற்று உத்தரவிட்டும் அதற்கு அடிபணிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுத்துவிட்டனர்.
இந்த இக்கட்டான நிலையைக் கூடிய விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்போவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
படம்: ஏஎஃப்பி

