மலேசியா-சிங்கப்பூர் விடிஎல் விமானப் பயணச்சீட்டு விலை அதிகரிப்பு

2 mins read
5a1e8acd-8e71-465b-b56a-55ab226be16c
-

கோலா­லம்­பூர்: தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணப் பாதை திட்­டத்­தின்கீழ் (விடி­எல்) மலே­சி­யா­வுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடையே விமா­னச் சேவை­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

சீனப் புத்­தாண்டு விடு­மு­றையை முன்­னிட்டு மலே­சியா-சிங்­கப்­பூர் விடி­எல் விமா­னச் சேவைக்­கான தேவை அதி­க­ரித்­தது.

அதே சம­யம் ஓமிக்­ரான்

கிரு­மிப் பர­வ­லால் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை ஏற்­றம் கண்­டது.

இத­னால் விமா­னங்­களில்

பய­ணம் செய்­யக்­கூ­டிய பய­ணி­

க­ளின் எண்­ணிக்­கை 50 விழுக்­காடு குறைக்­கப்­பட்­டது.

இதன் விளை­வாக அதற்­கான பய­ணச்­சீட்­டு­க­ளின் கட்டணம்

அதி­க­ரித்­தது.

மலே­சி­யா­வுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடையே பய­ணி­கள் நிலம் வழி­யாக விடி­எல் திட்­டத்­தின்­கீழ் பேருந்­து­க­ளைப் பயன்­ப­டுத்தி

பய­ணம் செய்­ய­லாம்.

ஆனால் இந்­தப் பேருந்­து­களில் பய­ணம் செய்­யக்­கூ­டிய பய­ணி­

க­ளின் எண்­ணிக்­கை­யும் பாதி

­யா­கக் குறைக்­கப்­பட்­டுள்­ளது.

ஒரு­நா­ளைக்கு 48 விடி­எல் பேருந்­துச் சேவை­கள் வழங்­கப்­

ப­டு­கின்­றன. அவற்­றில் தினந்­

தோ­றும் ஏறத்­தாழ 2,300 பய­ணி­கள் பய­ணம் செய்­கின்­ற­னர்.

மார்ச் மாதம் வரை அனைத்துப் பேருந்துப் பயணச்சீட்டுகளும் விற்கப்பட்டுவிட்டதாக விடிஎல் திட்டத்தின்கீழ் பேருந்துச் சேவை வழங்கும் டிரான்ஸ்டார் டிராவல், காஸ்வே லிங்க் ஆகிய நிறுவனங்கள் தெரிவித்தன.

விமானப் பயணச்சீட்டுகளின் கட்டணம் அதிகரிப்பின் காரணமாக சிங்கப்பூரில் தங்கள் உறவினரின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனதாக மலேசியரான 69 வயது திரு ஜோசஃப் சூசை தெரிவித்தார்.

விமானப் பயணச்சீட்டுகளின் விலை மட்டுமின்றி கொவிட்-19 பரிசோதனைக்கான செலவுகளையும் கருத்தில் கொண்டு அவர் சிங்கப்பூருக்கு வரவில்லை.

அத்துடன், விமானத்தில் பயணம் செய்யும்போது தமக்கும் தமது 60 வயது தங்கைக்கும் கிருமித்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதைக் கருத்தில் கொண்டு சிங்கப்பூருக்குப் பயணம் மேற் கொள்ள எடுத்த முடிவை மாற்றிக் கொண்டதாக அவர் கூறினார்.

அதிக செலவு, கட்டுப்பாடுகள் ஆகியவை காரணமாக பயணத் திட்டத்தைக் கைவிட்டதாக திரு சூசை கூறினார்.