சிங்கப்பூரில் சனிக்கிழமை (பிப்ரவரி 12) நிலவரப்படி 1,206 பேர் கொவிட்-19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்வழி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து எட்டாவது நாளாக ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
எட்டுப் பேர் உயிர் இழந்தனர் என்று சுகாதார அமைச்சு சனிக்கிழமை அன்று அதன் அன்றாட அறிக்கையில் தெரிவித்தது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் 22 பேர் சிகிச்சைப் பெற்றனர்.
இதனுடன்,151 பேருக்கு செயற்கை சுவாசம் தேவைப்பட்டது.
ஒப்புநோக்க வெள்ளிக்கிழமை அன்று 128 பேருக்கு செயற்கை சுவாசம் தேவைப்பட்டது.
இந்நிலையில் உள்ளூரில் புதிதாக 10,325 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டது.
இது வெள்ளிக்கிழமை காணப்பட்ட 9,711 எனும் எண்ணிக்கையைவிட அதிகம்.
உள்ளூரில் தொற்று ஏற்பட்டவர்களில் 2,549 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மூலம் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
ஏஆர்டி பரிசோதனைகளின் வழி 7,776 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களுக்கு தொற்று அறிகுறி இல்லை அல்லது லேசான அறிகுறி மட்டும் இருந்தது என்பதை இது காட்டுகிறது.
வெளிநாட்டிலிருந்து வந்த 180 பேருக்கு கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டது.
வாராந்திரத் தொற்றுப் பரவல் விகிதம் சனிக்கிழமை அன்று 1.54ஆக இருந்தது. ஒப்புநோக்க, வெள்ளிக்கிழமை அன்று வாராந்திரத் தொற்று பரவல் விகிதம் 1.74ஆக இருந்தது.
முந்தைய வாரத்தில் ஏற்பட்ட தொற்றுச் சம்பவங்களுடன் கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட தொற்றுச் சம்பவங்களை ஒப்பிடுகிறது வாராந்திர தொற்றுப் பரவல் விகிதம்.
வாராந்திரத் தொற்றுப் பரவல் விகிதம் ஒன்றுக்கு மேல் இருப்பது வாராந்திரப் புதிய தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.

