பதற்றத்தைத் தணிக்க முயற்சி

பதற்றத்தைத் தணிக்க முயற்சி

2 mins read
251f1285-c7a5-47d1-b226-85eae7940d65
-

ஹோன­லுலு: உக்­ரேன் எல்­லையில் ரஷ்யா பதற்­றத்தை அதி­கரிக்­கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டா­மல் பார்த்­துக்­கொள்ள ஒன்­றி­ணைந்து செயல்­ப­டப்­போ­வ­தாக அமெ­ரிக்­கா­வின் வெளியுறவு அமைச்­சர் ஆண்­டனி பிளிங்­க­னும் ஜப்­பான், தென்­கொ­ரியா ஆகிய நாடு­க­ளின் வெளி­யு­றவு அமைச்­சர்­களும் கூறி­யுள்­ள­னர். வட­கொ­ரியா அண்­மை­யில் நடத்­திய அணு­வா­யு­தச் சோத­னை­க­ள் பற்றியும் மூவ­ரும் கண்­டித்­துப் பேசி­னர்.

வட்­டார அள­வில் நிலைத்­தன்­மையை உறு­திப்­ப­டுத்­தத் தங்­கள் நாடு­கள் வலு­வாக ஒத்­து­ழைப்­ப­தன் முக்­கி­யத்­து­வத்­தைத் திரு பிளிங்­கன், ஜப்­பா­னிய வெளி­யு­றவு அமைச்­சர் யோஷி­மாசா ஹயாஷி, தென்­கொ­ரிய வெளி­யு­றவு அமைச்­சர் சங் இய்-யோங் ஆகி­யோர் வலி­யு­றுத்­தி­னர்.

ஹவா­யி­யில் பல்­வேறு அம்­சங்­களை அல­சிய பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்ட பிறகு வெளி­யிடப்­பட்ட கூட்டு அறிக்­கை­யில் அவர்­கள் அவ்­வாறு குறிப்­பிட்­ட­னர். உக்­ரேன் எல்­லை­யில் ரஷ்­யா­வின் ராணு­வப் படை­கள் ஒன்­று­கூ­டி­யி­ருப்­ப­தைப் பற்­றிப் பேசிய அமைச்சர்கள், உக்­ரே­னின் அர­சுரிமைக்கு அசைக்­க­மு­டி­யாத ஆத­ரவு வழங்­கு­வ­தாக அறிக்­கை­யில் தெரி­வித்தனர்.

ரஷ்யா உக்­ரே­னைப் படை­ எடுக்கக்கூடும் என்று விடுக்­கப்­பட்ட எச்­ச­ரிக்­கை­க­ளைத் தொடர்ந்து 12க்கும் அதி­க­மான நாடு­கள் உக்­ரே­னில் இருக்­கும் தங்­கள் நாட்­ட­வரை வெளி­யே­று­மாறு கேட்­டுக்­கொண்­டுள்­ளன. அமெ­ரிக்கா, பிரிட்­டன், ஜெர்­மனி ஆகி­யவை அவற்­றில் அடங்­கும்.

உக்­ரே­னுக்­குப் பய­ணம் மேற்­கொள்­ள­வேண்­டாம் என்­றும் அமெ­ரிக்கா உள்­ளிட்ட நாடு­கள் தனது மக்­க­ளுக்கு அறி­வுரை வழங்­கி­யுள்­ளது.

உக்­ரேன் எல்­லை­யில் மாஸ்கோ சுமார் 100,000 துருப்­பு­களை நிறுத்தி வைத்­துள்­ளது. ஆனால், அந்­நாட்­டைப் படை­யெக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்­றும் அது கூறி வரு­கிறது.

இப்­பி­ரச்­சி­னைக்கு மத்­தி­யில் தனது ஆகா­ய­வெ­ளியை மூடு­வதில் எந்­தப் பல­னும் இல்லை என்று உக்­ரேன் சொல்­கிறது.

அந்­நாட்­டுக்­குப் பய­ணம் மேற்­கொள்­வதை உட­ன­டி­யாக நிறுத்­தப்­போ­வ­தாக நெதர்­லாந்­தின் 'கேஎல்­எம்' விமா­னச் சேவை நேற்று முன்­தி­னம் கூறி­யது. இதர சில விமா­னச் சேவை­களும் பாதிக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி­யன்று கிழக்கு உக்­ரேன் ஆகா­ய­வெ­ளிப் பகு­தி­யில் தவ­று­த­லாக சுடப்­பட்­ட­தால் மலே­சிய ஏர்­லைன்­ஸின் எம்­ஹெச்17 பய­ணி­கள் விமா­னம் கீழே விழுந்து நொறுங்­கி­யது. அதி­லி­ருந்த அனை­வ­ரும் மாண்­ட­னர்.