ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆஸ்திரேலியா கெடு

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆஸ்திரேலியா கெடு

1 mins read
c69ba9ae-d585-4fb8-8b85-1725c83776d6
கான்பெராவில் நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கிப் பேரணியில் ஈடுபட்ட மக்கள். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இரு நாடுகளிலும் கொவிட்-19 சான்றிதழ் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வந்துள்ளன.படம்: ஏஎஃப்பி -

கான்­பெரா: நேற்­றைக்­குள் ஆர்ப்­பாட்­டங்­களை நிறுத்­திக்­கொள்­ளு­மாறு ஆஸ்­தி­ரே­லி­யக் காவல்­துறை ஆயி­ரக்­கா­னோ­ருக்­குக் கெடு விதித்­தது.

கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தைக் கட்­டா­யப்­படுத்­தும் சட்­டங்­க­ளுக்கு எதி­ராக ஆஸ்­தி­ரே­லி­யா­வில் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் பல நாள்­க­ளாக ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்டு வந்­த­னர்.

தலை­ந­கர் கான்­பெ­ரா­வின் முக்­கி­யப் பகு­தி­கள் பல­வற்­றில் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் ஆர்ப்­பாட்­டங்­களில் இறங்­கி­னர். நூற்­றுக்­க­ணக்­கா­னோர் நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத்­திற்கு அருகே திரண்­ட­தா­கக் காவல்­துறை தெரி­வித்­தது.

ஆகக் கடைசி நில­வ­ரப்­படி கான்­பெ­ரா­வில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் யாரும் கைது­செய்­யப்­ப­ட­வில்லை. நேற்­றைக்­குள் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் ஒன்றுகூடிய இடங்­க­ளி­லி­ருந்து வெளி­யேறா­விட்­டால் என்ன நட­வடிக்கை எடுக்­கப்­படும் என்­பது குறித்து தக­வல் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

நியூ­சி­லாந்து தலை­ந­கர் வெல்­லிங்­ட­னி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தைக் கட்­டா­யப்­ப­டுத்­தும் சட்­டங்­களை எதிர்த்­துப் பலர் ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­ட­னர்.

நியூ­சி­லாந்­தின் பல்­வேறு பகு­தி­களில் டொவி சூறாளி ஓர­ளவு பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது. அவ­சி­ய­மற்­றப் பய­ணங்­களை மேற்­கொள்­ள­வேண்­டாம் என்று பொது­மக்­க­ளுக்கு எச்­ச­ரிக்­கை­யும் விடுக்­கப்­பட்­டது. பல இடங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டது. ஆனால் இந்தப் பிரச்சினைகூட ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை நிறுத்­த­வில்லை.

இதற்­கி­டையே, கொவிட்-19 கொள்­ளை­நோய்ப் பர­வ­லால் அதி­கம் பாதிக்­கப்­ப­டா­மல் இருந்த சிறிய நாடான கூக் தீவு­களில் முதன்­முறை­யாக சமூக அள­வில் ஒரு­வருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. கிருமித்­தொற்­றுக்கு ஆளான ஒரு­வர் அந்­நாட்­டுக்­குப் பய­ணம் மேற்­கொண்­ட­தைத் தொடர்ந்து சமூக அள­வில் கொவிட்-19 பர­வக்­கூ­டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிருமித்தொற்றுக்கு ஆளான அந்த பயணி நியூசிலாந்திலிருந்து கூக் தீவுகளுக்குச் சென்றார்.