கனவு உலகில் செல்சி

அபுதாபி: தேசிய அணிகள் அல்லாத காற்பந்து குழுக்களுக்கான உலகக் கிண்ணத்தை இங்கிலிஷ் பிரிமியர் லீக் அணியான செல்சி முதன்முறையாக வென்றுள்ளது. பல்வேறு கண்டங்களுக்கான வெற்றியாளர் கிண்ணங்களை வென்ற அணிகள் பங்கேற்கும் இப்போட்டியின் இறுதியாட்டத்தில் பிரேசிலின் பால்மெய்ராஸ் அணியை கூடுதல் நேரத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது செல்சி.

ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் செல்சியை முன்னணிக்கு அனுப்பினார் ரொமெலு லுக்காக்கு. 64வது நிமிடத்தில் கோல் எண்ணிக்கை சமமானது. அதற்குப் பிறகு கூடுதல் நேரத்தின் கடைசி சில நிமிடங்களில் பெனால்டி வாய்ப்பைக் கோலாக்கி செல்சிக்குக் கிண்ணத்தை வென்று தந்தார் காய் ஹெவர்ட்ஸ்.

பிரிமியர் லீக்கில் சற்று தடுமாறினாலும் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக், குழுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டி ஆகியவற்றில் செல்சியை அபாரமாக ஆடவைத்து வருகிறார் இதன் நிர்வாகி தாமஸ் டூக்கல்.

"இது நின்றுவிடப்போவதில்லை. தொடர்ந்து கிண்ணங்களைக் குவிக்கும் எண்ணம் கொண்டுள்ளோம்," என்றார் டூக்கல்.

ரஷ்ய செல்வந்தர் ரோமன் அப்ரமோவிச் வாங்கிய பிறகு தான் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் கிண்ணத்தை ஒருமுறையாவது வென்றுள்ளது செல்சி. அப்ரமோவிச் வாங்குவதற்கு முன்பு செல்சி சாதாரணமான ஓர் அணியாகத்தான் இருந்தது. இப்போது உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!