கூடுதல் விமானங்கள் உக்ரேனிய ஆகாயவெளியைத் தவிர்க்கக்கூடும்

கூடுதல் விமானங்கள் உக்ரேனிய ஆகாயவெளியைத் தவிர்க்கக்கூடும்

1 mins read
5616e501-d1b6-46a4-b0fc-143ccdbfe733
படம்: ராய்ட்டர்ஸ் -

ரஷ்யா எந்த நேரத்திலும் தாக்கக்கூடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து, கூடுதலான விமானங்கள் உக்ரேனின் ஆகாயவெளியைத் தவிர்க்கக்கூடும் என்று விமானச் செயல்பாட்டு ஆலோசனை நிறுவனம் ஒன்று திங்கட்கிழமை (பிப்ரவரி 14) கூறியுள்ளது.

உக்ரேனுக்கும் அந்நாட்டின் ஆகாயவெளி வழியாகவும் விமானச் சேவைகளை தான் நிறுத்தவுள்ளதாக நெதர்லாந்தைச் சேர்ந்த கேஎல்எம் விமான நிறுவனம் கூறியது. உக்ரேனுக்கு விமானச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பது குறித்து தான் பரிசீலித்து வருவதாக ஜெர்மனியின் லுஃப்தான்சா நிறுவனம் கூறியது.

பிரிட்டிஷ் தலைநகர் லண்டனுக்கும் ஆசியாவுக்கும் இடையே திங்கட்கிழமை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானச் சேவைகள் உக்ரேனிய ஆகாயவெளியைத் தவிர்த்ததாகத் தெரிகிறது.

உக்ரேனிய ஆகாயவெளியைத் தவிர்ப்பதால், அண்டை நாடுகளில் இருந்து புறப்படும் விமானங்களுக்கு பயணப் பாதை நீளுவதால் குறிப்பிடத்தக்க அளவு தாக்கம் ஏற்பட்டாலும், தொலைதூர விமானப் பயணங்களுக்கான செலவு பெரிதாக அதிகரிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, உக்ரேனிய ஆகாயவெளி வழியாக விமானப் பயணம் தொடர்வதைக் காப்புறுதி நிறுவனங்கள் உறுதிசெய்ய, விமானப் பாதுகாப்புக்காக அரசாங்கம் 16.6 பில்லியன் ஹிருன்யாவை (S$795 மில்லியன்) ஒதுக்கியுள்ளதாக உக்ரேனிய பிரதமர் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

குறிப்புச் சொற்கள்