பிலிப்பீன்ஸ் விமான நிலையத்தில் திண்டாடும் மலேசிய பயணிகள்; நுழைய அனுமதியில்லை

பிலிப்பீன்ஸ் விமான நிலையத்தில் திண்டாடும் மலேசிய பயணிகள்; நுழைய அனுமதியில்லை

1 mins read
a14569b3-d039-4b29-af68-486e227dcc0c
-

பெட்­டா­லிங் ஜெயா: மணி­லா­வில் உள்ள நினோய் அக்­கினோ அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் மலே­சி­யா­வைச் சேர்ந்த 15 பேர் நாட்­டுக்­குள் நுழைய அனு­மதி மறுக்­கப்­பட்­ட­தால் செய்­வ­த­றி­யாது திண்­டாடி வரு­கின்­ற­னர்.

மலே­சி­யா­வில் அவர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தால் பிலிப்­பீன்­சில் நுழைய அனு­ம­தி­யில்லை என்று பிலிப்­பீன்ஸ் குடி­நு­ழை­வுத் துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பெயர் தெரி­விக்க விரும்­பாத மலே­சிய பய­ணி­களில் ஒரு­வர், மலே­சிய மின்­னி­லக்க தடுப்­பூசி சான்­றி­தழ் 'மைசே­ஜா­தேரா'வை ஏற்றுக்­கொள்­ளக்­கூ­டிய தடுப்­பூசி சான்­றி­தழ் அல்ல என்று பிலிப்­பீன்ஸ் அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­கச் சொன்­னார்.

இதை­ய­டுத்து மலே­சிய பய­ணி­கள் 15 பேரும் பிலிப்­பீன்­சில் நுழைய அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. இதனால் மணிலா விமான நிலையத்திலேயே அவர்கள் திண்டாடி வருகின்றனர்.

சென்ற ஞாயிற்­றுக் கிழமை அன்று கோலா­லம்­பூ­ரி­லி­ருந்து அவர்­கள் மணிலா வந்து சேர்ந்­த­னர்.

மலே­சி­யர்­க­ளின் கட­வுச்­சீட்­டு­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்டுள்ள நிலையில் அவர்கள் இன்று தாயம் திருப்பி அனுப்­பப்­ப­டு­வார்­கள் எனத் தெரிகிறது.

"சிங்­கப்­பூர் மற்­றும் பிரிட்­டனில் தடுப்­பூசி போட்­ட­வர்­கள் மட்­டும் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

"ஆனால் மலே­சி­யா­வில் தடுப்­பூசி போட்­ட­வர்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்பட­வில்லை," என்று ஞாயிறு இரவு அந்த மலே­சி­யப் பயணி தெரி­வித்­தார்.