விமானி அறைக்குள் நுழைய பயணி முயற்சி; அவசரமாக தரையிறங்கிய அமெரிக்க விமானம்

விமானி அறைக்குள் நுழைய பயணி முயற்சி; அவசரமாக தரையிறங்கிய அமெரிக்க விமானம்

1 mins read
4f549648-4b79-48e9-a915-aefe342dd3ca
-

வாஷிங்­டன்: அமெ­ரிக்க ஏர்­லைன்ஸ் விமா­னத்­தின் பயணி ஒரு­வர் விமானி அறைக்­குள் நுழைய முயற்சி செய்­த­தால் பதற்­றமும் குழப்­ப­மும் ஏற்­பட்டு அவ­ச­ர­மாக தரையி­றக்­கப்­பட்­டது.

சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை மதி­யம் லாஸ் ஏஞ்­சல்ஸ் நக­ரி­லி­ருந்து வாஷிங்­டன் நகரை நோக்கி அந்த விமா­னம் பறந்­தது.

அப்­போது பயணி ஒரு­வர் வலுக்­கட்­டா­ய­மாக விமானி அறைக்­குள் நுழைய முயற்சி செய்­த­தோடு அவ­ ச­ரக் கத­வை­யும் திறக்க முயன்­றார்.

இத­னால் பய­ணி­கள் அதிர்ச்சி அடைந்­த­னர்.

விமா­னச் சிப்­பந்­தி­களும் சில பய­ணி­களும் ஒன்­று­சேர்ந்து அவரை மடக்கி தரை­யில் அழுத்­திப் பிடித்­த­னர்.

கன்­சாஸ் சிட்­டி­யில் தரை இறங்­கி­ய­தும் அவரை அதி­கா­ரி­கள் கைது செய்­த­னர்.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளி­யிட்ட அமெ­ரிக்க ஏர்­லைன்ஸ், நெருக்­க­டி­யான சூழ்­நி­லையை விமா­னச் சிப்­பந்­தி­கள் திற­மை­யாக கையாண்­ட­தாக தெரி­வித்தது.

அதே விமா­னத்­தில் பய­ணம் செய்த வாஷிங்­ட­னைச் சேர்ந்த 37 வயது மோவாஸ் மோஸ்­டஃபா, விமானி அறைக்­குள் ஒரு பயணி நுழைய முயற்சி செய்­தார் என்­றார்.

"அவ­சர கதவை அவர் திறக்க முயற்சி செய்­தார். விமா­னத்­தின் பின்­பக்­கத்­திற்கு ஓடிச் சென்று காப்­பிக் குவ­ளை­யைக் கொண்­டு­வந்த விமா­னச் சிப்­பந்­தி­களில் ஒரு­வர், அவ­ரது தலை­யில் பல­முறை தாக்­கி­னார்," என்று மோவாஸ் மோஸ்­டஃபா மேலும் தெரி­வித்­தார்.