தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நியூயார்க்கில் கத்திக் குத்து; ஆசிய பெண் மரணம்

2 mins read
37b3e13a-6f07-4c14-a703-4d0d18c30b99
-

நியூ­யார்க்: நியூ­யார்க்­ மேன்­ஹாட்­ட­னில் உள்ள ஒரு வீட்­டில் 35 வயது பெண் கத்­தி­யால் குத்தி கொல்­லப்­பட்­டார்.

ஆசி­யா­வைச் சேர்ந்த 35 வயது பெண்ணை மர்ம நபர் ஒரு­வர் பின்­தொ­டர்ந்து வந்து கத்­தி­யால் குத்­தி­ய­தாக ஆரம்­பக்­கட்ட தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

திரு­மதி கிறிஸ்­டினா யுனா லீ என காவல்­து­றை­யி­னரால் அடை­யா­ளம் காணப்­பட்ட பெண், நியூ­யார்க் நக­ரில் தாக்­கு­தல் அல்­லது கொல்­லப்­பட்ட ஆசிய வம்­சா­வ­ளி­யைச் சேர்ந்த அண்­மைய நபர் ஆவார்.

கண்­கா­ணிப்­புக் கேம­ரா­வில் பதி­வான காட்­சியில் திரு­மதி கிறிஸ்­டினா லீயை சைனா­ட­வு­ன், கிறிஸ்டை ஸ்தி­ரீட்­டில் உள்ள அவரது வீடு வரை ஒரு­வர் பின்­தொ­டர்ந்து செல்வது தெரி­கிறது.

மாலை 4.30 மணி­வாக்­கில் திரு­மதி லீ தமது வீடு உள்ள கட்­ட­டத்­துக்­குள் நுழை­கி­றார். அதன் பிறகு திரு­மதி லீ கேம­ரா­வில் பதி­வா­க­வில்லை. அவ­ரைப் பின்­தொ­டர்ந்­த­வர் ஆசா­மட் நாஷ், 25 என அடை­யா­ளம் காணப்பட்டுள்ளது.

சத்­தம் கேட்டதால் குடி­யி­ருப்­பா­ளர்­கள் சிலர் காவல்­து­றைக்கு தக­வல் தெரி­வித்­த­னர்.

இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர், வீட்­டுக்­குள் நுழைந்­த­போது குளி­யல் தொட்­டி­யில் திரு­மதி லீ மாண்டு கிடந்­தார்.

பின்­பக்­கம் கதவு வழி­யாக தப்ப முடி­யாத நாஷ் வீட்­டுக்­குள் சிக்­கிக் கொண்­டார். அவரை காவல்­து­றை­யி­னர் கைது செய்­த­னர்.

நாஷ் ஏற்­கெ­னவே காவல்துறை யினரால் கைது செய்­யப்­பட்­டவர்.

கடந்த செப்­டம்­ப­ரில் கிராண்ட் ஸ்தி­ரீட் நிலை­யத்­திற்கு அருகே இருந்த கட்­ட­டத்­தில் ஒரு­வர் கொல்­லப்பட்ட சம்­ப­வத்தில் அவர் கைது செய்­யப்­பட்­டார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

திருமதி லீயை கொல்வதற்கான அவரது நோக்கம் தெரியவில்லை. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.