கோலாலம்பூர்: மலேசிய எதிர்க்கட்சித் தலைவரான அன்வார் இப்ராஹிமின் கெஅடிலான் (பிகேஆர்) கட்சி, ஜோகூர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளி யிட்டது. மலேசிய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியுடன் (முடா) தொகுதி உடன்பாடு முடிவுக்கு வராததால் மூன்று இடங்களுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப் படவில்லை.
ஜோகூர் பாருவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்களை அன்வார் வெளியிட்டார். மூன்று தொகுதிகள் எஞ்சியுள்ளன.
ஆனால் ஜனநாயக செயல் கட்சி, அமானா நெகாரா கட்சி ஆகிய இரண்டும் தொகுதி உடன்பாடு செய்து முடாவுக்கு ஆறு இடங்களை ஒதுக்கியுள்ளன.
பிகேஆர் கட்சிக்கும் முடாவுக்கும் இடையே இழுபறி நீடிக்கிறது. முன்னாள் அமைச்சர் சையது சாதிக் அப்துல் ரஹ்மான் தலைமையில் முடா செயல்படுகிறது.

