கிழக்கு ஐரோப்பாவில் மோசமடையும் ஓமிக்ரான்

கிழக்கு ஐரோப்பாவில் மோசமடையும் ஓமிக்ரான்

1 mins read
4d74dbb6-b899-49c7-b716-7f368a41acd8
-
Google News Preferred Icon

கிழக்கு ஐரோப்பாவில் ஓமிக்ரான் பரவல் மோசமடைந்து வருவதாகவும் அங்கு தடுப்பூசி போடும் பணிகளையும் மற்ற நடவடிக்கைகளையும் முடுக்கிவிட வேண்டும் என்றும் உலகச் சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில், ஆர்மீனியா, அஸர்பைஜான், பெலாரஸ், ​​ஜார்ஜியா, ரஷ்யா, உக்ரேன் ஆகிய நாடுகளில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் எண்ணிக்கை இருமடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய இயக்குனர் ஹான்ஸ் க்ளூக் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த வட்டாரத்தில் சென்ற வாரம் மட்டும் ஏறத்தாழ 25,000 பேர் கிருமித்தொற்று காரணமாக பலியாகிவிட்டனர்.