சிங்கப்பூரில் புதன்கிழமை (பிப்ரவரி 16) முதல் கொவிட்-19 நோயாளிகளில் கூடுதலானோர் மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
3 வயது முதல் 69 வயதானோருக்கு அது பொருந்தும்.
இவர்களை பொது மருத்துவர்கள் கவனித்துக் கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சு கூறியது.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட 70 முதல் 79 வயதானோருக்கு மருத்துவச் சிக்கல் இல்லாமல், மிதமான அறிகுறிகள் மட்டுமே இருந்தால் மருத்துவமனை செல்லத் தேவையில்லை.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட 80 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர், தடுப்பூசி செலுத்தாத 70 முதல் 79 வயதானோர் வீட்டிலேயே குணமடையலாம்; தொலைமருத்துவச் சேவையின் கீழ் அவர்கள் கண்காணிக்கப்படுவர்.
80 அல்லது அதற்கு மேலான வயதுடைய, முழுமையாகத் தடுப்பூசி போடாதோர் சமூக சிகிச்சை நிலையங்களில் சேரலாம்.
பிறந்து 3 மாதங்கள் ஆகாத பச்சிளங் குழந்தைகளுக்கு சமூக சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை அளிக்கப்படும். 3 மாதம் முதல் 3 வயதுக்குக் கீழான குழந்தைகள் வீட்டிலேயே குணமடையலாம்.
சிங்கப்பூரின் மருத்துவப் பராமரிப்பு வசதிகள் அதிகத் தேவை உடையோருக்குச் சேவையாற்ற ஏதுவாக புதிய நடைமுறைகள் நடப்புக்கு வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

