அமெரிக்காவுடன் பேச்சு நடத்த தயார் என்கிறது ரஷ்யா

அமெரிக்காவுடன் பேச்சு நடத்த தயார் என்கிறது ரஷ்யா

2 mins read
4d8a2e7a-142c-441d-9020-fdb4b0bcab97
-

மாஸ்கோ: ஏவு­க­ணை­கள் மீதான கட்­டுப்­பா­டு­கள் உள்­ளிட்ட பாது­காப்பு வி‌ஷ­யங்­கள் குறித்து அமெ­ரிக்கா, நேட்­டோ­வு­டன் பேச்­சு­வார்த்தை நடத்த ர‌ஷ்யா தயா­ராக உள்­ள­தாக அந்­நாட்­டின் அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் தெரி­வித்­துள்­ளார்.

ஆனால் மேற்­கத்­திய நாடு­கள் ர‌ஷ்­யா­வின் சில கோரிக்­கை­க­ளுக்கு செவிசாய்க்க வேண்­டும் என்­றும் அவர் சொன்­னார்.

ஜெர்­மா­னிய தலை­வர் ஒலஃப் ஸ்கால்­ஸு­ட­னான பேச்­சு­வார்த்­தைக்­குப் பிறகு பேசிய அவர் இவ்­வாறு சொன்­னார்.

ஐரோப்­பா­வில் நடுத்­தர தொலைவு ஏவு­க­ணை­கள் மீதான கட்­டுப்­பா­டு­கள், ராணுவ பயிற்­சி­கள் பற்­றிய வெளிப்­ப­டைத்­தன்மை உள்­ளிட்ட நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான விவா­தங்­களில் ஈடு­பட ர‌ஷ்யா தயா­ராக இருப்­ப­தாக புட்­டின் கூறி­னார்.

இதற்­கி­டையே, நேற்று மேலும் சில படை­களை உக்­ரேன் எல்­லை­யில் இருந்து மீட்­டுக்­கொள்­வ­தாக ர‌ஷ்யா கூறி­யது.

கிரை­மி­யா­வில் நடை­பெற்ற ராணுவ பயிற்சி முடிந்­து­விட்­ட­தாக அது கூறி­யுள்­ளது.

ஆனால், பிரிட்­டி‌ஷ் பாது­காப்பு செய­லா­ளர் பென் வாலஸ், "தங்­கள் நட­வ­டிக்­கை­யி­லி­ருந்து ரஷ்யா பின்­வாங்­கு­வ­தற்­கான எந்த அறி­கு­றி­யை­யும் தான் பார்க்­க­வில்லை," என்­றார்.

அதே­ச­ம­யம், பெல­ராஸ் பகு­தி­யில் ர‌ஷ்ய படை­கள் வரும் 20ஆம் தேதி வரை பயிற்­சி­யில் ஈடு­பட்­டி­ருக்­கும் என்று தெரி­கிறது.

இந்­நி­லை­யில் பேசிய அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன், ர‌ஷ்யப் படை­க­ளின் ஒரு பகுதி திரும்­பப் பெறப்­பட்ட போதும் போருக்­கான சாத்­தி­யம் நீங்­கி­வி­ட­வில்லை என்று தெரி­வித்­துள்­ளார்.

போர் மூண்­டால் அனைத்­து­லக அள­வில் ரஷ்யா கடும் கண்­ட­னத்­தைச் சந்­திக்க நேரி­டும் என்­றும் பெரும் பொருள்­சே­த­மும் உயிர்ச்­சே­த­மும் ஏற்­படும் என்­றும் பைடன் சுட்­டிக் காட்­டி­யுள்­ளார்.

இவற்­றுக்கு மத்­தி­யில், உக்­ரே­னின் தற்­காப்பு அமைச்சு, இரண்டு வங்­கி­கள் உள்­ளிட்­ட­வற்­றின் இணைய செயல்­பா­டு­கள் நேற்று ஸ்தம்­பித்­தது. இதற்கு ர‌ஷ்­யா­தான் கார­ணம் என்று உக்­ரே­னின் தக­வல் பாது­காப்பு அமைப்பு கூறி­யது.

அமைச்­சின் இணை­யத்­த­ளம் இணைய ஊடு­ரு­வ­லுக்கு உள்­ளா­கி­யி­ருப்­ப­தா­க­வும் அத­னைச் சரி செய்­யும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­தா­க­வும் அமைச்சு சொன்­னது.

தற்­காப்பு அமைச்­சின் இணை­ய­தள பக்­கத்­தில், 'பரா­ம­ரிப்­பில் உள்­ளது' எனக் கூறப்­பட்­டி­ருந்­தது.