தென்கொரியாவில் இரட்டிப்பான தொற்று

தென்கொரியாவில் இரட்டிப்பான தொற்று

1 mins read
cc5cb118-11a3-4858-b3d9-b47ab2d80e3e
-

சோல்: தென்­கொ­ரி­யா­வில் இது­வரை­யில்­லாத அள­வில் நேற்று 90,000 தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

முந்­திய நாள் இந்த எண்­ணிக்கை ஏறத்­தாழ 57,000ஆக இருந்­தது.

கட்­டுப்­பா­டு­கள், பரி­சோ­தனை, தொடர்பு தட­ம­றி­தல் போன்­ற­வற்­றின் கார­ண­மாக தென்­கொ­ரி­யா­வில் தொற்­றுச் சம்­ப­வங்­களும் உயி­ரி­ழப்­பு­களும் கட்­டுக்­குள் இருந்­து­வந்­தன.

இந்­நி­லை­யில், ஒமிக்­ரான் பர­வல் கார­ண­மாக ஒரே வாரத்­தில் அன்­றாட பாதிப்பு இரண்டு மடங்கு அதி­க­ரித்­துள்­ளது.

எனவே, தொடர்பு தட­ம­றி­தல், தனி­மைப்­ப­டுத்­தல் ஆகி­ய­வற்­றைக் கைவிட்ட தென்­கொ­ரியா வீட்­டி­லேயே குண­ம­டை­யும் முறையை பின்­பற்­றத் தொடங்­கி­யுள்­ளது.

இதற்­கி­டையே, தற்­போ­தைய கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை தளர்த்­து­வது குறித்து அர­சாங்­கம் பரி­சீ­லித்து வரு­வ­தாக பிர­த­மர் கிம் பூ-கியூம் கூறி­யி­ருக்­கி­றார்.

உண­வ­கங்­கள், மது­பா­னக்­கூடங்­கள் இரவு 9 மணிக்கு மேல் செயல்­ப­டு­வ­தற்கு உள்ள தடை, ஆறுக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் கூடு­வதற்­கான தடை­கள் தளர்த்­தப்­ப­டக்­கூ­டும் என்று தெரி­கிறது.

அடுத்த மாதம் 9ஆம் தேதி அதி­பர் தேர்­தல் நடை­பெ­ற­வுள்ள நிலை­யில், தளர்­வு­கள் குறித்து நாளை அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு வெளி­யா­கக்­கூ­டும்.

ஆனால், தளர்­வு­க­ளால் தொற்றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்­றும் அது நாட்­டின் சுகா­தார அமைப்பை நிலை­கு­லை­யச் செய்து­வி­டும் என்­றும் நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.