தோக்கியோ: ஜப்பானில் நேற்று ஆக அதிகமாக 236 பேர் தொற்றுக்குப் பலியாகினர்.
கூடுதல் தடுப்பூசி போடும் திட்டத்தைச் செயல்படுத்த ஜப்பானிய அரசாங்கம் தாமதப்படுத்துவதால் தான், ஓமிக்ரான் பரவலுக்கு அதிகமானோரைப் பலிகொடுக்க நேர்ந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஜப்பானிய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 30 விழுக்காட்டினர் 65 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்கள் ஆவர்.
இரண்டாவது தடுப்பூசிக்கும் கூடுதல் தடுப்பூசிக்குமான கால இடைவெளியை, மற்ற நாடுகள் குறைத்துவிட்டபோதும், ஜப்பானிய அரசாங்கம் எட்டு மாதம் என்றே தொடர்ந்து பின்பற்றியது. தற்போது அது ஆறு மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் வெறும் 10 விழுக்காட்டினர் மட்டுமே கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த இடைவெளி தென்கொரியாவில் மூன்று மாதங்களாகவும் சிங்கப்பூரில் ஐந்து மாதங்களாகவும் உள்ளது. இந்நாடுகளில், 50 விழுக்காட்டினர் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

