தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் எய்ட்ஸ் நோயிலிருந்து மீண்ட முதல் பெண்

1 mins read
adf0c0f2-8df0-48ac-812e-845764b5e2c8
-

நியூ­யார்க்: அமெ­ரிக்­கா­வின் நியூ­யார்க் நக­ரைச் சேர்ந்த 64 வயது பெண் ஒரு­வர் எய்ட்ஸ் நோயில் இருந்து முழு­மை­யாக குண­ம­டைந்­துள்­ளார்.

இந்­தப் பெண்­ணுக்கு தொப்­புள் கொடி ரத்­தத்­தில் இருந்து எடுக்­கப்­பட்ட ஸ்டெம் செல்­கள் மூலம் சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு குண­ம­டைந்து உள்­ள­தாக மருத்­து­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

கடந்த 2013ஆம் ஆண்­டில் இந்த பெண்­ணுக்கு எய்ட்ஸ் நோய் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது. இதை­ய­டுத்து, அவ­ரு­டைய நெருங்­கிய உற­வி­னர் ஒரு­வர் அப்­பெண்­ணுக்கு தொப்­புள் கொடி ரத்­தம் தானம் செய்­தார். பின்­னர் அந்த பெண்­ணுக்கு அதன் ஸ்டெம் செல்­கள் செலுத்தி, அவரின் நோயெதிர்ப்பு திறனைப் பலப்­ப­டுத்த மருத்­து­வர்­கள் முயற்சி மேற்­கொண்­ட­னர். அதன் பிறகு மருத்­து­வர்­கள் அவ­ருக்­கான எய்ட்ஸ் சிகிச்­சையை நிறுத்தினர்.

அவ்­வாறு நிறுத்தி 14 மாதங்­கள் ஆன நிலை­யி­லும் அவ­ரது உட­லில் மீண்­டும் எச்­ஐவி கிருமி கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை என்றனர் மருத்­து­வர்­கள். புற்­று­நோ­யாலும் பாதிக்­கப்­பட்­டுள்ள இவர், எய்ட்ஸ் நோயிலிருந்து குண­ம­டைந்த முதல் பெண் ஆவார்.