வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை வியட்னாம் தளர்த்துகிறது

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை வியட்னாம் தளர்த்துகிறது

1 mins read
57382482-b162-4a03-ba0b-cb1662b9dd12
-

ஹனோய்: வெளி­நாட்­டுச் சுற்­று­லாப் பய­ணி­க­ளுக்­கான கட்­டுப்­பா­டு­களை வியட்­னாம் அர­சாங்­கம் தளர்த்­த­வுள்­ள­தாக அர­சாங்­கத் தக­வல்­களை மேற்­கோள்­காட்டி அந்­நாட்­டின் நாளி­தழ் ஒன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

மார்ச் 15ஆம் தேதி முதல் இது நடை­மு­றைக்கு வரு­வ­தாக அது சொன்­னது.

வியட்­னாம் செல்­லும் வெளி­நாட்­டுச் சுற்­று­லாப் பய­ணி­கள் தடுப்­பூசி விதி­மு­றை­க­ளுக்கு உட்­பட வேண்­டும் என்­றும் கூறப்­பட்­டுள்­ளது.

புறப்­ப­டு­வ­தற்கு முன்­னர், கிரு­மித்­தொற்று இல்லை என்­ப­தற்­கான பரி­சோ­தனை சான்­றி­தழ் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வேண்­டும். கொவிட்-19 தொற்­றுக்­கான அறி­குறி உள்­ள­வர்­க­ளுக்கு வியட்­னாம் விமான நிலை­யத்­தில் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­படும் என்­றும் மற்­ற­வர்­கள் 24 மணி நேரம் சுய­மாக தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்றும் கூறப்­பட்­டுள்­ளது.