சிட்னி: மேற்கு ஆஸ்திரேலியா வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் மாநிலத்திற்கு வர அனுமதி அளித்துள்ளது.
ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களின்படி, மாணவர்கள் நேரடி விமானச் சேவை வழியாகவோ, மற்ற மாநிலங்கள் வழியாகவோ மேற்கு ஆஸ்திரேலியாவிற்குச் செல்லலாம்.
கிருமித்தொற்று இல்லை என்பதற்கான சான்றாக புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட பரிசோதனை சான்றிதழ் அவசியம். அத்துடன் குறைந்தது இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பது அவசியம் என்றது மாநில சுகாதார அமைச்சு. ஆஸ்திரேலியா சென்ற 24 மணி நேரத்திற்குப் பிறகு, பிசிஆர் அல்லது ஏஆர்டி பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.

