விளையாட்டுச் செய்திகள்

ஆறு ஆட்டங்களுக்குப் பிறகு கோல் போட்ட ரொனால்டோ

லண்டன்: பிரைட்டன் காற்பந்துக் குழுவை வீழ்த்திய மான்செஸ்டர் யுனைடெட் இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் பட்டியலில் மீண்டும் நான்காவது இடத்தைப் பிடித்தது. ஆறு ஆட்டங்களாக கோல் போடாத ரொனால்டோ, நேற்றைய ஆட்டத்தின் முதல் கோலைப் போட்டார்.

காயம்பட்டதற்கான கூடுதல் நேரத்தின்போது மேன்யூவின் புருனோ ஃபெர்னான்டிஸ் அடுத்த கோலைப் போட்டார். இதற்கிடையே, தப்பாட்டம் காரணமாக பிரைட்டனின் லுவிஸ் டன்க் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். கடைசி வரை போராடிய பிரைட்டன் கோல் எதையும் போடாததால் 2-0 என்ற கோல்கணக்கில் வென்றது மான்செஸ்டர் யுனைடெட்.

'சிட்டி குழுவால் இதைவிட சிறப்பாக விளையாடமுடியும்'

லிஸ்பன்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துத் தொடரில் காலிறுதிக்கு முந்திய ஆட்டத்தின் முதல் சுற்றில் ஸ்போர்ட்டிங் குழுவிற்கு எதிராக மான்செஸ்டர் சிட்டி வீரர்கள் கோல்களைப் போட்டுத் தள்ளினர். எதிரணி மண்ணில், ஐந்து கோல்களைப் போட்ட சிட்டிக் குழு, ஸ்போர்ட்டிங் குழுவை கோல் போடவிடாமல் தடுத்து கம்பீரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இது இரண்டாவது சுற்று ஆட்டம் நடைபெறுவதற்கு முன்பே, சிட்டி குழு காலிறுதிக்கு முன்னேறிவிடும் என்ற உறுதியான நம்பிக்கையை அளித்துள்ளது.

2016-17ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் தொடரிலும், ஸ்டூவா புக்கரெஸ்ட் குழுவை அதன் சொந்த மண்ணில்

0-5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது சிட்டி.

7வது நிமிடத்தில் மஹ்ரேஸ் போட்ட முதல் கோலைத் தொடர்ந்து, சில்வாவின் இரட்டை கோல்களோடு, ஃபோடென், ஸ்டெர்லிங் இருவரும் தலா இரண்டு கோல்கள் போட்டனர். இதற்கிடையே, சில்வா உதைத்த பந்து 'ஆஃப்சைட்' என்று கோலாக ஏற்றுக்கொள்ளப்படாததால், 'ஹாட்ரிக்' கோல் போடும் அவரது முயற்சி கைகூடவில்லை.

ஆட்டத்திற்குப் பிறகு பேசிய பெப் கார்டியோலா, "என்னுடைய கனவு வெற்றி இது. ஆனால், சிட்டி குழுவால் இதைவிட சிறப்பாக விளையாடமுடியும்," என்றார். தன் குழுவில் சில வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றும் அவர் சொன்னார்.

மான்செஸ்டரில் அடுத்த மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இக்குழுக்கள் மோதவுள்ளன.

ரியால் மட்ரிட்டிற்கு அதிர்ச்சி அளித்த பிஎஸ்ஜி

பாரிஸ்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துத் தொடரின் மற்றோர் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் நெய்மாரின் உதவியால் கோல் போட்டு ரியால் மட்ரிட் குழுவிற்கு அதிர்ச்சி அளித்தார் பிஎஸ்ஜியின் எம்பாப்பே.

சொந்த மண்ணில் நடந்த அந்த ஆட்டத்தில் காயம்பட்டதற்கான கூடுதல் நேரத்தின்போது எம்பாப்பே போட்ட அந்த கோலையடுத்து, 1-0 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி குழு வெற்றி பெற்றது.

பெரும்பாலான ஆட்டநேரத்தில் பிஎஸ்ஜி குழு ஆதிக்கம் செலுத்தினாலும் ரியால் மட்ரிட் குழுவின் தற்காப்பை உடைத்து, கோல் போட திணறியது. ஆனால், நெய்மார் ரியால் மட்ரிட் குழுவிற்குச் சவாலாக இருந்தார். சென்ற நவம்பர் மாதத்திற்குப் பிறகு நேற்றைய ஆட்டத்தில் அவர் மீண்டும் களமிறங்கினார்.

ரியால் வீரர்களைக் கடந்து, நெய்மார் பந்தை லாவகமாக எம்பாப்பேவிடம் அனுப்பியது அனைவரையும் ஈர்த்தது. அடுத்த மாதம் 9ஆம் தேதி மட்ரிட்டில் இக்குழுக்கள் மோதும் இரண்டாவது சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!