மெக்சிகோ எல்லையில் அகதிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

மெக்சிகோ எல்லையில் அகதிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

1 mins read
813b48f8-6e58-454a-833b-92fe71f081e7
-

மெக்­சிகோ: மெக்­சி­கோ­வின் தெற்கு எல்­லை­யில் அக­தி­க­ளாக தங்­கி­யி­ருக்­கும் ஏரா­ள­மா­ன­வர்­கள் தங்­க­ளுக்கு குடி­நு­ழைவு ஆவ­ணங்­கள் வேண்­டும் என நூதன ஆர்ப்­பாட்­டம் செய்தனர்.

பெரும்­பா­லும் மத்­திய, தென் அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த அந்த குடி­யே­றி­கள் ஊசி, பிளாஸ்­டிக் நூல்­க­ளைக் கொண்டு ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் தைத்­துக்­கொண்­ட­னர். உண­வ­ருந்­து­வ­தற்­காக வாயின் ஒரு சிறிய பகு­தியை மட்­டும் விட்­டு­விட்டு, தங்­கள் வாயின் இரண்டு பக்­கங்­க­ளை­யும் அவர்­கள் தைத்­த­னர்.

ஆர்ப்­பாட்­டத்­தின் அடை­யா­ள­மாக அவர்­கள் இவ்­வாறு செய்­த­தாக ஆர்­வ­லர் ஒரு­வர் சொன்­னார்.

"நாங்­கள் இங்கே கைதி­க­ளைப் போல் இருக்­கி­றோம்," என்ற ரிவேரா, மெக்­சிகோ குடி­நு­ழை­வுத் துறை­யி­டம் பதி­லுக்­காக ஒரு மாதத்­திற்­கும் மேலாக காத்­தி­ருப்­ப­தா­கக் கூறி­னார்.

படம்: ராய்ட்டர்ஸ்