சிங்கப்பூரில் அன்றாட கொவிட்-19 தொற்று எண்ணிக்கை புதன்கிழமை (பிப்ரவரி 16) நிலவரப்படி சற்று குறைந்து 16,883ஆக இருந்தது.
செவ்வாய்க்கிழமை இந்த எண்ணிக்கை 19,420 ஆக இருந்தது. 2020ஆம் ஆண்டு சிங்கப்பூரில் கொவிட்-19 முதன்முதலில் கண்டறியப்பட்டதிலிருந்து பதிவான ஆக அதிகமான அன்றாடத் தொற்று எண்ணிக்கை இதுவாகும்.
நேற்றைய நிவவரப்டி 1,352 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். அதற்கு முந்தைய நாள் இந்த எண்ணிக்கை 1,355.
கொவிட்-19 பாதிப்புக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து பன்னிரண்டாவது நாளாக ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
கிருமிப் பாதிப்பால் மேலும் 13 பேர் உயிரிழந்தனர்.
புதன்கிழமை பதிவான தொற்றுப் பாதிப்பில் 12,714 பேருக்கு ஆன்டிஜன் விரைவு பரிசோதனை (ஏஆர்டி) மூலம் தொற்று கண்டறியப்பட்டது.
எஞ்சிய 3,975 பேருக்கு பல்படியத் தொடர்வினை பரிசோதனை (பிசிஆர்) மூலம் தொற்று கண்டறியப்பட்டது.
இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 194 பேருக்கு தொற்று உறுதியானது.
தொடர்புடைய செய்திகள்
வாராந்திர தொற்று விகிதம் புதன்கிழமை 1.29ஆக இருந்தது.


