சவூதி அரேபியாவில் பெண் ரயில் ஓட்டுநர்களை வேலைக்கு எடுப்பதற்காகக் கொடுக்கப்பட்ட விளம்பரத்துக்கு 28,000 விண்ணபங்கள் குவிந்தன.
கல்வி தகுதி, ஆங்கில மொழி ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் ஓட்டுநர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பேர் , அதிவிரைவு ரயிகளில் ஓட்டுநர்களாப் பணிபுரிவர்.
அண்மை காலம் வரை, சவூதியில் பெண்கள் ஆசிரியர்களாகவும், மருத்துவ ஊழியர்களாகவும் மட்டுமே வேலை செய்தனர்.
அன்றாட நடைமுறைகளில் ஆண்கள், பெண்கள் எனத் தனித் தனிப் பிரிவாகப் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் அந்நாட்டில் பின்பற்றபட்டு வருகின்றன.
இந்த நடைமுறைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்பட்டு வருகின்றன.
கடந்த ஐந்தாண்டுகளில் வேலையிடத்தில் பெண்களின் விகிதம் 33 விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஆண்கள், வெளிநாட்டு ஊழியர்கள் மட்டுமே செய்துவந்த தொழில்களில் சவூதி பெண்கள் தங்கள் திறமையைக் காட்டிவருகின்றனர்.

