'படைகளைத் திரும்பப் பெற்றதாக ர‌ஷ்யா பொய் சொல்கிறது'

'படைகளைத் திரும்பப் பெற்றதாக ர‌ஷ்யா பொய் சொல்கிறது'

2 mins read
d6950700-cc32-4780-bada-174cce9f72e1
உக்ரேனின் லுஹான்ஸ்க் பகுதியைச் சேர்ந்த ஸ்டானிட்சியா லுஹான்ஸ்காவில் உள்ள இந்த பாலர் பள்ளி ர‌ஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுடனான மோதலில் சேதமடைந்ததாக உக்ரேன் ராணுவ அதிகாரிகள் கூறினர். படம்: ராய்ட்டர்ஸ் -

வா‌ஷிங்­டன்: உக்­ரேன் எல்­லையை ஒட்­டிய பகு­தி­யில் இருந்து தனது படை­கள் திரும்­பப் பெறப்­பட்­ட­தாக ர‌ஷ்யா சொல்­வது பொய் என்று அமெ­ரிக்கா கூறி­யுள்­ளது.

மாறாக எல்­லை­யில் ர‌ஷ்யா தனது படை­ப­லத்தை அதி­கப்­ப­டுத்தி­யுள்­ள­தா­க­வும் அமெ­ரிக்கா சந்­தே­கிக்­கிறது.

ர‌ஷ்யா மேலும் 7,000 படை வீரர்­களை எல்­லை­யில் குவித்துள்­ள­தாக அமெ­ரிக்க அர­சாங்­கத்­தின் மூத்த அதி­காரி ஒரு­வர் சொன்­னார்.

தனது பெயரை வெளி­யிட விரும்­பாத அந்த அதி­காரி, அவர்­களில் பெரும்­பா­லா­னோர் புதன்­கி­ழ­மை­யன்று எல்­லை­யைச் சென்று சேர்ந்­த­தாக அவர் சொன்­னார்.

பொது­வெ­ளி­யில் அர­ச­தந்­திர தீர்வை விரும்­பு­வ­தாக கூறும் ர‌ஷ்யா, உள்­ளுக்­குள் போருக்­குத் தயா­ராகி வரு­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

"குறிப்­பிட்ட சில இடங்­களில் ராணு­வப் பயிற்சி முடி­வுக்கு வரு­கிறது. அதன் பிறகு படை­கள் தங்­க­ளது இடங்­க­ளுக்­குத் திரும்­பும். அதற்குச் சில காலம் ஆகும்," என்று ர‌ஷ்ய செய்­தித் தொடர்­பாளர் டிம்ட்ரி பெஸ்­கோவ் நேற்று சொன்­னார்.

இதற்­கி­டையே, ரஷ்ய ஆத­ரவு கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்­கும் உக்­ரே­னியப் படை­க­ளுக்­கும் இடையே கிழக்கு உக்­ரே­னில் துப்­பாக்­கிச் சூடு நடந்­தது. இரு பிரி­வி­ன­ரும் ஒரு­வரையொரு­வர் சாடு­கின்­ற­

னர்.

இதை­ய­டுத்து தாக்­கு­தல் தீவி­ர­மடைந்­ததா அல்­லது போர்­நி­றுத்த ஒப்­பந்­ததை மீறி கடந்த எட்டு ஆண்டு­க­ளாக நடக்­கும் வழக்­க­மான மோதலா இது என்­பதை உறு­தி­யாக கூற­மு­டி­ய­வில்லை என்­கின்­றன ஊட­கங்­கள்.

உக்ரேன் மீது போர் தொடுக்க, ர‌ஷ்யா கிளர்ச்­சி­யா­ளர்­கள் மீதான தாக்­கு­தலை கார­ண­மாக சொல்­லக்­கூ­டும் என்று மேற்­கத்­திய நாடு­கள் தொடர்ந்து எச்­ச­ரித்துகொண்டே இருக்­கின்­றன.

ஆனால், பதற்­றத்­தைத் தூண்டி உக்ரேன் அப்­ப­கு­தி­யை மீண்டும் கைப்­பற்ற முனை­வ­தாக ர‌ஷ்யா கூறுகிறது.