சொகுசு கார்களை ஏற்றிச் சென்ற கப்பலில் தீ

சொகுசு கார்களை ஏற்றிச் சென்ற கப்பலில் தீ

1 mins read
c667f50b-9800-446a-927b-4dfc761d29ac
-

நியூயார்க்: ஜெர்மனியில் இருந்து கிட்டத்தட்ட 1,200 போர்‌ஷ் கார்கள் உட்பட பல சொகுசுக் கார்களுடன் ரோட் தீவுகளுக்குப் புறப்பட்ட சரக்குக் கப்பல் நடுக்கடலில் தீப்பற்றி எரிந்தது.

கப்பலில் இருந்த 32 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

போர்ச்சுக்கலின் அசோர்ஸ் தீவுகள் அருகே அட்லாண்டிக் பெருங்கடலில் இந்த விபத்து நிகழ்ந்தது. கப்பலில் ஏறத்தாழ 4,000 சொகுசு கார்கள் இருந்ததாக வோக்ஸ்வேகன் தெரிவித்ததாக இணையதளம் ஒன்று கூறியது.