நியூயார்க்: ஓமிக்ரான் கிருமிப் பரவல் சம்பவங்கள் உலகமெங்கும் குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும், 'ஓமிக்ரான் பிஏ.2' எனும் துணை திரிபு கிருமிப் பரவல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
உலகளவில் கிருமித்தொற்றுக்கான பரிசோதனைகள் குறைந்துள்ளதால், இதுகுறித்த தெளிவான தகவல் கிடைக்கவில்லை என்றும் அது சொன்னது.
சீனா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பிலிப்பீன்ஸ் உட்பட பல ஆசிய நாடுகளில் 'பிஏ. 2' துணை திரிபு ஆதிக்கம் செலுத்து வதாகவும் நிறுவனம் கூறியது.
டென்மார்க்கில் முதலில் கண்டறியப்பட்ட பிஏ.2, ஓமிக்ரானைவிட வேகமாக பரவக்கூடியது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

