குறைந்த சம்பளம் உள்ளோருக்கு தலா 5 ஏஆர்டி பரிசோதனைக் கருவிகள்

குறைந்த சம்பளம் உள்ளோருக்கு தலா 5 ஏஆர்டி பரிசோதனைக் கருவிகள்

1 mins read
9e1f73d6-49a5-4059-822e-bbd9ab8ddb63
குறைந்த சம்பளம் பெறும் சிங்கப்பூர்வாசி ஒவ்வொருவரும் சமூக சேவை அலுவலகங்களுக்கும் குடும்ப சேவை நிலையங்களுக்கும் சென்று 5 ஏஆர்டி கருவிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறியுள்ளார். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் உள்ள 24 சமூக சேவை அலுவலகங்களுக்கும் 47 குடும்ப சேவை நிலையங்களுக்கும் சுமார் 140,000 ஏஆர்டி பரிசோதனைக் கருவிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

குறைந்த சம்பளம் பெறும் சிங்கப்பூர்வாசி ஒவ்வொருவரும் அவற்றில் தலா 5 ஏஆர்டி கருவிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறியுள்ளார்.

இப்பிரிவினர் ஏஆல்டி பரிசோதனைக் கருவிகளை வாங்கும் செலவைச் சமாளிக்கவும் தேவைப்படும் நேரத்தில் சுயபரிசோதனை செய்துகொள்ளவும் இது உதவும் என்றார் திரு ஓங்.

திரு ஓங் இது குறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 18) அன்று பதிவிட்டார்.

குறைந்த சம்பளம் பெறுவோர் சமூக சேவை அலுவலகங்களையும் குடும்ப சேவை நிலையங்களையும் உதவிக்கு அணுகலாம் என்று அவர் குறிப்பிட்டார்

சமூக சேவை அலுவலகங்களில் ஏஆர்டி கருவிகளை வழங்குவது குறித்து சுகாதார அமைச்சும் சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து பணியாற்றி வருவதாக அமைச்சர் கூறினார்.