சிசுவைக் குத்திக் கொன்ற பதின்ம வயது பெண்

சிசுவைக் குத்திக் கொன்ற பதின்ம வயது பெண்

1 mins read

ஒரு பச்சிளம் குழந்தையைக் கொன்ற பதின்ம வயது பெண்ணுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட கொலை குற்றச்சாட்டை மலேசியா அரசாங்கம் மறுபரிசீலித்து வருகிறது.

15 வயதான அந்தச் சிறுமி குழந்தையைப் பெற்றேடுத்தவர் என நம்பப்படுகிறது.

பிறந்த சில மணிநேரத்துக்குள் ஒரு கூர்மையான பொருளைக் கொண்டு சிசுவின் நெஞ்சை அவர் குத்தியதாகக் மலேசியக் காவல் துறை கூறியது.

குழந்தையின் உடலில் மற்ற பல காயங்களும் இருந்தன.

இதனையடுத்து சிறுமிக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

ஆனால் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கருவுற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கொலை குற்றச்சாட்டை அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் மறுபரிசீலித்து வருகின்றனர்.

சிறுமியைப் பலாத்காரம் செய்த 20 வயது மதிப்புதக்க ஆடவரைக் காவல் துறை தேடிவருகிறது.