ஒட்டாவா: ஆர்ப்பாட்டத்தால் மூன்று வாரங்களாக முடங்கியிருந்த கனடியத் தலைநகர் ஒட்டாவாவில், நூற்றுக்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் சேராமல் தடுக்க சுமார் நூறு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
நாடாளுமன்றத்துக்கு அருகே நிறுத்தியிருந்த அவர்களின் வாகனங்களைக் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
கடுங்குளிரையும் பொருட்படுத்தாது, அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.
முன்னதாக, ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து விலகிச் செல்லும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
மறுத்தவர்களை அவர்கள் கைது செய்ய நேரிட்டது.
கைது நடவடிக்கை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இருப்பினும் மற்ற இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலை களை மறித்து வாகனங்களை நிறுத்திவைத்துப் போராட்டத்தைத் தொடர்ந்ததாகச் செய்திகள் தெரிவித்தன.

