சிங்கப்பூரில் அன்றாட கொவிட்-19 தொற்று எண்ணிக்கை சனிக்கிழமை (பிப்ரவரி 19) நிலவரப்படி 15,836ஆக இருந்தது.
ஒப்புநோக்க வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 18,094 பேருக்குத் தொற்று உறுதியானது.
நேற்றைய நிவவரப்டி 1,491 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். வெள்ளிக்கிழமை இந்த எண்ணிக்கை 1,458ஆக இருந்தது.
மருத்துவமனைகளில் கொவிட்-19 பாதிப்புக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து பதினைந்தாவது நாளாக ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் 182 பேருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 43 பேர் உள்ளனர்.
கொவிட்-19க்கு மேலும் நால்வர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 137 பேருக்குத் தொற்று உறுதியானது.
வாராந்திர தொற்று விகிதம் வெள்ளிக்கிழமையிலிருந்து சற்று அதிகரித்து சனிக்கிழமை 1.54ஆக இருந்தது. வெள்ளிக்கிழமை அது 1.46ஆக இருந்தது
தொடர்புடைய செய்திகள்
சனிக்கிழமை நிலவரப்படி வாராந்திர தொற்று விகிதம் சற்று அதிகரித்து 1.54ஆக இருந்தது. வெள்ளிக்கிழமை அது 1.46ஆக இருந்தது. (படம்: ஸ்ரெய்ட்ஸ் டெம்ஸ்)


