சிங்கப்பூரில் அதிகரித்துவரும் கொவிட் தொற்றுச் சம்பவங்களைச் சமாளிக்க அதிக தாதிகள், சுகாதார நிபுணர்கள், தொண்டூழியர்கள் தேவைபடுகின்றனர்.
இந்த வேண்டுகோளை சுகாதார அமைச்சு சிங்கப்பூர் மருத்துவப் படை உறுப்பினர்களுக்கு விடுத்துள்ளது.
மருத்துவமனைகள், சமூகப் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் சிகிச்சை பெறும் நோயாளிகளைப் பராமரித்துக்கொள்ள ஆட்கள் தேவைப்படுவதாக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
சுகாதாரத் துறையில் அனுபவம் இல்லாதவர்களும் தங்கள் பங்கையாற்ற முன்வரலாம்.
தேர்ந்தெடுக்கபடுவோர் இம்மாதத்திலிருந்து பணியில் அமர்த்தப்படுவர்.
அவர்களுக்கான சம்பள விவரங்கள் அறிக்கையில் வெளியிடப்படவில்லை.
கொவிட் -19 சுகாதாரப் பணிகளுக்கு ஆதரவு அளிக்க சிங்கப்பூர் மருத்துவப் படை தொடங்கப்பட்டது.

