ஜோகூரில் 3,000 போலிஸ் குவிப்பு

ஜோகூரில் 3,000 போலிஸ் குவிப்பு

1 mins read
a426cbe9-8a7c-4a1f-a0c7-c03756061444
-

மெர்சிங்: ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 26) நடக்கவிருக்கும் மனுத்தாக்கலின்போது சுமார் 3,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடு படுத்தப்பட உள்ளனர். வேட்பு மனுத்தாக்கல் பணிகள் சுமுக மாக நடைபெற இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜோகூர் தலைமைக் காவல்துறை அதிகாரி கமருல் ஜமான்

மாமட் தெரிவித்துள்ளார்.

ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் மார்ச் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. மனுத்தாக்கலுக்குப் பின்னர் நடைபெற இருக்கும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போதும் அதிகமான காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளதை அவர் மறுக்க வில்லை. தஞ்சோங் லிமானில் நேற்று செய்தியார்களிடம் பேசிய அவர், எல்லாத் தரப்பின ரும் காவல்துறை மற்றும் தேர்தல் ஆணைய விதிகளுக்கு ஏற்ப நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். வரும் சனிக்கிழமை மனுத்தாக்கல் ஜோகூர் மாநிலம் முழுவதும்

56 நிலையங்களில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் கூடுதலாகத் தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக அதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார் அதிகாரி.