இந்தோனீசியாவின் சொந்தத் தடுப்பூசி ஆகஸ்ட்டில் பொதுமக்களுக்கு போடப்படலாம்

இந்தோனீசியாவின் சொந்தத் தடுப்பூசி ஆகஸ்ட்டில் பொதுமக்களுக்கு போடப்படலாம்

2 mins read
04e951fb-ad59-45cf-9315-cabce5003a44
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சியா 'மேரா புத்தே' என்­னும் தனது சொந்­தத் தயா­ரிப்பு தடுப்­பூ­சியை பரி­சோ­தித்து வரு­கிறது. மக்­க­ளுக்கு அந்­தத் தடுப்­பூ­சி­யைப் போட்டு பரி­சோ­திக்­கும் முதற்­கட்ட மருத்­து­வப் பரி­சோ­தனை தற்­போது நடந்து வரு­கிறது. இந்­தோ­னீ­சிய மக்­களில் 65 விழுக்­காட்­டுக்­கும் மேற்­பட்­டோர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர். இந்­நி­லை­யில், உள்­நாட்­டி­லேயே தடுப்­பூ­சி­யைத் தயா­ரிப்­பது இந்­தோ­னீ­சி­யா­வுக்கு நல்­ல­தொரு முன்­னேற்­றம் என்று பகுப்­பாய்­வா­ளர்­கள் தெரி­வித்து உள்­ள­னர்.

நாட்­டின் தேசிய கொடி­யின் நிறத்­தைக் குறிக்­கும் வகை­யில் சிவப்பு, வெள்ளை (மேரா புத்தே) என தடுப்­பூ­சிக்­குப் பெய­ரி­டப்­பட்டு உள்­ளது. இதன் மீதான ஆராய்ச்­சியை சுர­பா­யா­வைத் தள­மா­கக் கொண்ட ஏர்­லெங்கா பல்­க­லைக்­க­ழ­க­மும் உள்­ளூர் மருந்­தக நிறு­வ­ன­மான பயோட்­டிஸ் பார்­மா­சூட்­டி­கல்­சும் இணைந்து நடத்தி உள்­ளன.

தடுப்­பூசி மீதான முதற்­கட்­டப் பரி­சோ­தனை இம்­மா­தம் 9ஆம் தேதி தொடங்­கி­யது. 90 தொண்­டூ­ழி­யர்­க­ளுக்கு இது செலுத்­தப்­பட்­டது. இரண்­டாம் கட்­டப் பரி­சோ­தனை மார்ச் மாதம் தொடங்­கும்­போது 405 தொண்­டூ­ழி­யர்­க­ளை­யும் ஏப்­ர­லில் தொடங்கி நடை­பெற இருக்­கும் மூன்­றாம் கட்­டப் பரி­சோ­த­னை­யில் 5,000 தொண்­டூ­ழி­யர்­க­ளை­யும் ஈடு­ப­டுத்­தத் திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது.

கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான நோயெ­திர்ப்பு சக்­தியை மனித உட­லில் இந்­தத் தடுப்­பூசி உரு­வாக்­கு­கி­றதா என்று முதற்­கட்­டப் பரி­சோ­த­னை­யில் உறு­தி­செய்த பின்­னரே அடுத்­த­டுத்த கட்­டப் பரி­சோ­த­னை­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­படும் எனத் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

அனைத்­துப் பரி­சோ­த­னை­களும் வெற்­றி­க­ர­மாக முடிக்­கப்­பட்­டால், இவ்­வாண்டு ஜூலை மாதம் அவ­ச­ர­நி­லைப் பயன்­பாட்­டுக்­கான அனு­ம­தியை இந்­தோ­னீ­சிய உணவு, மருந்­துப்­பொ­ருள் கண்­ கா­ணிப்பு ஆணை­யம் வழங்­கும் என்­றும் அதன் பின்னர் ஆகஸ்ட் மாதம் பொது­மக்­க­ளுக்கு போட தடுப்பூசி தயாராகிவிடும் என்றும் ஆய்வை முன்­னின்று நடத்­தி­வ­ரும் ஏர்­லெங்கா பல்­க­லைக்­க­ழ­கப் பேரா­சி­ரி­யர் ஃபெடிக் அப்­துல் ரஹ்­மான் 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தித்­தா­ளி­டம் கூறி­னார்.