மகாதீர்: பதவிக்கு வராதபடி நஜிப் தடுக்கப்பட வேண்டும்

மகாதீர்: பதவிக்கு வராதபடி நஜிப் தடுக்கப்பட வேண்டும்

2 mins read
7b11f6bc-b494-47ff-94fb-ec6de7af28cd
-

பெட்­டா­லிங் ஜெயா: முன்­னாள் பிர­த­மர் நஜிப் ரசாக் மீது தமக்கு தனிப்­பட்ட விரோ­தம் இல்லை என்று டாக்­டர் மகா­தீர் முகம்­மது தெரி­வித்­துள்­ளார்.

ஜோகூர் மாநில சட்­ட­மன்­றத் தேர்­த­லை­யொட்டி அம்­மா­நில வாக்­கா­ளர்­க­ளுக்கு எழு­தி­யுள்ள தமது இரண்­டா­வது கடி­தத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

"நஜிப் அவ­ரது தந்­தை­யைப் போல இல்லை. நாட்­டின் இரண்­டா­வது பிர­த­ம­ரான அவ­ரது தந்தை அப்­துல் ரசாக் ஹுசைன் சிறந்த தேசி­ய­வாதி. நாட்­டின் நல­னுக்­கா­கப் போரா­டிய கண்­ணி­ய­மிக்க தலை­வர். ஆனால் நஜிப்போ நாட்­டின் செல்வ வளத்தை ஜோ லோவின் துணை­யு­டன் கொள்­ளை­ய­டித்துள்­ளார்.

"நஜிப் மீது எனக்கு தனிப்­பட்ட விரோ­தம் இல்லை. அவர் துணைப் பிர­த­மர் பத­வி­யைப் பெற, பிர­த­ம­ராக இருந்த அப்­துல்லா படா­வி­யி­டம் அழுத்­த­மா­கப் பரிந்­து­ரைத்­தேன். அவர் துணைப் பிர­த­மர் ஆக என் ஆத­ரவை வழங்­கி­னேன். 1எம்­டிபி விவா­க­ரத்­திற்­குப் பின்­னரே நஜிப்­பைக் குறை­கூ­றத் தொடங்­கி­னேன்.

"நீதி­மன்­றம் தண்­டித்த பின்­ன­ரும் அவர் அதற்­காகச் சிறிதும் வருத்தப்படவில்லை. அவர் மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஏற்காதவாறு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்," என்று டாக்­டர் மகா­தீர் தமது கடி­தத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.

முன்­ன­தாக, தம்­மைத் தாக்கி கடி­தம் எழு­தும் அள­வுக்கு மகா­தீர் உடல்­ந­லம் தேறி இருக்­க­வேண்­டும் என கடந்த 15ஆம் தேதி திரு நஜிப் தமது ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டி­ருந்­தார். அதற்­குப் பதி­ல­ளிக்­கும் வகை­யில் டாக்­டர் மகா­தீர் நேற்று முன்­தி­னம் கடி­தத்தை வெளி­யிட்­டார்.

மார்ச் 12ஆம் தேதி நடைபெற இருக்கும் ஜோகூர் மாநிலத் தேர் தலில் அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி வெற்றிபெறும் என பரவலாக எதிர்பார்க்கப்படு கிறது. எதிர்த்தரப்பினர் பலவாறாகப் பிரிந்து களத்தில் நிற்பதால் இந்த நிலை என கூறப்படுகிறது.