சிங்கப்பூரில் அன்றாட கொவிட்-19 தொற்று எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 20) நிலவரப்படி 15,283ஆக இருந்தது. ஒப்புநோக்க சனிக்கிழமை நிலவரப்படி, 15,836 பேருக்குத் தொற்று உறுதியானது.
நேற்றைய நிலவரப்படி, மருத்துவமனைகளில் சிகிச்கை பெறுவோரின் எண்ணிக்கை 1,523 பேர் ஆக இருந்தது. சனிக்கிழமை இந்த எண்ணிக்கை 1,491ஆக இருந்தது.
மருத்துவமனைகளில் கொவிட்-19 பாதிப்புக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து பதினாறாவது நாளாக ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் 195 பேருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 39 பேர் உள்ளனர்.
கொவிட்-19க்கு மேலும் நால்வர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 212 பேருக்குத் தொற்று உறுதியானது.
வாராந்திர தொற்று விகிதம் சனிக்கிழமையிலிருந்து சற்று அதிகரித்து ஞாயிற்றுக்கிழமை 1.59ஆக இருந்தது. சனிக்கிழமை அது 1.54ஆக இருந்தது


