வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை மீண்டும் வரவேற்க தொடங்கியுள்ளது ஆஸ்திரேலியா.
ஈராண்டுகளுக்குப் பிறகு இன்று (பிப்ரவரி 21) அதன் எல்லைகள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுப்பயணிகளுக்குத் திறந்துவிடப்பட்டன.
இன்று மட்டும் ஆஸ்திரேலியாவுக்கு 50 அனைத்துலக விமானச் சேவைகள் பறக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அவற்றில் 27 சேவைகள் நாட்டின் ஆகப் பெரிய நகரமான சிட்னியில் தரையிறங்கும்.
ஆஸ்திரேலியாவின் பல விமான நிலையங்களில் ஆனந்தக் கண்ணீருடன் பல உறவினர்களும் நண்பர்களும் ஒன்றிணைந்தனர்.
2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அங்கு எல்லைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் சுற்றுப்பயணத் துறை முடங்கிப்போனது.
கூடியவிரைவில் அதிகமான அளவில் சுற்றுப்பயணிகளை ஈர்க்க ஆஸ்திரேலியா நம்பிக்கை கொண்டுள்ளது.


