கொவிட்-19 கிருமித்தொற்றால் நிலைகுலைந்துள்ள ஹாங்காங்

கொவிட்-19 கிருமித்தொற்றால் நிலைகுலைந்துள்ள ஹாங்காங்

2 mins read
08c87403-a780-4c2e-acf9-13a5ba3064c8
-

ஹாங்­காங்: ஹாங்­கில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது. இதை­ய­டுத்து, மேலும் கடு­மை­யான சமூக இடை­வெளி விதி­மு­றையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது குறித்து அந்நாடு பரி­சீ­லனை செய்­கிறது. அண்­மை­யில் பலர் நோய்­வாய்ப்­பட்­டுள்­ள­தால் ஹாங்­காங்­கின் மருத்­து­வக் கட்­ட­மைப்­புக்கு நெருக்­கு­தல் ஏற்­பட்­டுள்­ளது. கொவிட்-19 அறவே இல்­லாத நிலையை நோக்கி செயல்­பட்டு வரும் ஹாங்­காங் அர­சாங்­கத்­துக்கு இது பெரும் பின்­ன­டைவை ஏற்­

ப­டுத்­தி­யுள்­ளது.

இது­வரை காணாத மிக மோச­மான கிரு­மிப் பர­வலை ஹாங்­காங் தற்­போது எதிர்­கொள்­கிறது.

மருத்­து­வ­ம­னை­களில் போது­மான படுக்­கை­கள் இல்­லாத கார­ணத்­தி­னால் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள மூத்­தோர் பலர் சாலை­ஓரமாகப் படுத்­துக் கிடக்­கின்­ற­னர். ஹாங்­காங் மக்­கள் பலர் பதற்­றம் அடைந்து மருத்­து­வ­ம­னை­களில் உள்ள அவ­ச­ர­கால சிகிச்­சைப் பிரிவு­ களில் திரண்­டுள்­ள­னர்.

நிலைமை கைமீறிப் போகா­மல் இருக்க ஹாங்­காங் அர­சாங்­கம் தேவை­யான நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக மேற்­கொள்ள வேண்­டும் என்று சீன அதி­பர் ஸி ஜின்­பிங் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

"அடுத்த ஓரிரு வாரங்­களில் நிலைமை எப்­படி இருக்­கிறது என்­பதை மிக உன்­னிப்­பா­கக் கண்­

கா­ணிக்க வேண்­டும். கிரு­மிப்

பர­வலை எவ்­வாறு கட்­டுக்­குள் கொண்டு­வ­ரு­வது என்­பது குறித்து அதன் பிறகு முடி­வெ­டுப்­போம்," என்று ஹாங்­காங்­கின் சுகா­தா­ரப் பாது­காப்பு மையத்­தின் கட்­டுப்­பாட்டு அதி­கா­ரி­யான எட்­வின் சுவீ நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தார்.

கிரு­மிப் பர­வ­லைக் குறைக்க சில நட­வ­டிக்­கை­களை நடை­

மு­றைப்­ப­டுத்­து­வது குறித்து ஹாங்­காங் அர­சாங்­கம் பரி­சீ­லித்து வரு­கிறது. கடைத்­தொ­கு­தி­க­ளுக்­குச் செல்­வோர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­ட­வர்­களா என்­பதை உறுதி செய்­யும் பொறுப்பு காவல்­து­றை­யி­ன­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­ப­டக்­கூ­டும். அத்­து­டன் உண­வ­கங்­களில் உண­

வ­ருந்­து­வது தொடர்­பாகக் கடு­மை­யான கட்­டுப்­பாடு­கள் விதிக்­கப்­

ப­டக்­கூ­டும்.

கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யி­

லி­ருந்து குறிப்­பிட்ட சில இடங்­

க­ளுக்கு முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் மட்­டுமே செல்­ல­லாம் என்று ஹாங்­காங்

அர­சாங்­கம் அறி­வித்­தது.

உடற்­ப­யிற்சிக் கூடங்­கள், அழகு நிலை­யங்­கள் ஆகி­ய­வற்றை இம்­மா­தம் 24ஆம் தேதி­யன்று மீண்­டும் திறக்க ஹாங்­காங் முத­லில் திட்­ட­மிட்­டி­ருந்­தது. ஆனால் தற்­போ­தைய நிலை­யைக் கருத்­தில் கொண்டு அத்­திட்­டம் கைவி­டப்­பட்­டுள்­ளது.

"தற்­போ­தைய நிலை­யைப் பார்க்­கும்­போது, கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க மேற்­கொள்­ளப்­பட்ட நட­

வ­டிக்­கை­கள் போது­மா­னவை அல்ல என்­பது நன்கு தெரி­கிறது. சவாலை முறி­ய­டிக்க சரி­யான முறை­யில் அர­சாங்­கம் திட்­ட­மி­ட­வில்லை," என்று ஹாங்­காங் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் தலைமை நிர்­வாகி கேரி லாமின் நிர்­வாக மன்­றத்­தின் உறுப்­பி­ன­ரு­மான திரு­வாட்டி ரெஜினா இப் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் நிலை­கு­லைந்­தி­ருக்­கும் ஹாங்­காங்கை விட்டு பலர் வெளி­யே­று­கின்­ற­னர். இது­வரை இல்­லாத அள­வில் கடந்த வாரம் 27,703 பேர் அந்­நாட்டை விட்டு வெளி­யே­றி­னர். அவர்­களில் 72 விழுக்­காட்­டி­னர் விமா­னங்­கள் மூலம் மற்ற நாடு­க­ளுக்­குச் சென்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. மற்­ற­வர்­கள் நிலம் வழி­யாக சீனா­வுக்­குச் சென்­ற­தாக ஹாங்­காங் குடி­நு­ழை­வுத் துறை வெளி­யிட்ட புள்­ளி

­வி­வ­ரங்­கள் காட்­டு­கின்­ற­ன.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட மிகக் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள், அர­சி­யல் நெருக்­கு­தல் கள் ஆகி­யவை கார­ண­மாகப் பலர் ஹாங்­காங்கை விட்­டுச் செல்­வ­

தா­கக் கூறப்­ப­டு­கிறது.