ரியோ டி ஜெனிரோ: கனமழை காரணமாக பிரேசிலில் நிலச்சரிவுகளும் திடீர் வெள்ளமும் ஏற்
பட்டுள்ளன.
இயற்கையின் சீற்றம் காரணமாக பிரேசிலின் பெட்ரோபொலிஸ் நகரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 165ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று முன்தினம் தெரிவித்தனர்.
நிலச்சரிவு ஏற்பட்டு மண்ணுக்குள் புதையுண்டு கிடப்போரைத் தேடி மீட்கும் பணிகள் முடுக்கி
விடப்பட்டுள்ளன.
மீட்புப் பணியாளர்களுடன் சேர்ந்த தங்கள் அன்புக்குரியவர்
களைத் தேடும் பணியில் உற
வினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இயற்கைப் பேரிடரால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இடங்கள் போர் நடந்து முடிந்த இடங்களைப் போல காட்சியளிப்பதாக
பிரேசிலிய அதிபர் ஜயிர் பொல்சொனாரோ தெரிவித்தார்.
மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மாண்டவர்களில் குறைந்தது 28 பேர் சிறுவர்கள் என அதிகாரிகள் கூறினர்.
இதற்கிடையே, பிரேசிலின் தென்கிழக்குப் பகுதியில் கனமழை தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக குறைந்தது இருவர் மாண்டுவிட்டதாக பிரேசிலிய அவசரகாலச் சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுவர் இடிந்து விழுந்ததில்
ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். இன்னொருவர் வெள்ளத்தில் மூழ்கி மாண்டார்.
கனமழை காரணமாக 1,200க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.
இயற்கைப் பேரிடர் காரணமாக கிட்டத்தட்ட 43 வீடுகள் அழிந்து விட்டதாக அதிகாரிகள் கூறினர்.

