தாயிடம் பிள்ளைகளை சேர்த்துவைத்த நீதிமன்றம்

தாயிடம் பிள்ளைகளை சேர்த்துவைத்த நீதிமன்றம்

2 mins read
2c8cb6f2-21e7-48ef-9022-f93442837f5a
-

கோலா­லம்­பூர்: மலே­சிய நல்­வாழ்­வுத் துறை­யின் பரா­ம­ரிப்­பின்­கீழ் இருக்­கும் மூன்று பிள்­ளை­களை அவர்­க­ளது தாயா­ரி­டம் அந்­நாட்டு உயர் நீதி­மன்­றம் சேர்த்­து­வைத்­துள்­ளது.

தமது மூன்று பிள்­ளை­க­ளை­யும் நல்­வாழ்­வுத் துறை உட­ன­டி­யாக தம்­மி­டம் ஒப்­ப­டைக்க வேண்­டும் என்று ஆட்கொணர்வு மனுவை திரு­வாட்டி லோ சியூ ஹொங் தாக்­கல் செய்­தி­ருந்­தார்.

இதை­ய­டுத்து, இது­தொ­டர்­பாக வழக்கு விசா­ரணை நடத்­தப்­பட்­டது. நல்­வாழ்­வுத் துறை மூன்று பிள்­ளை­க­ளை­யும் திரு­வாட்டி லோவி­டம் ஒப்­ப­டைக்க வேண்­டும் என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி­யன்று உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டதை நீதி­பதி கொலின் லாரன்ஸ் செக்­கு­வேரா சுட்­டி­னார்.

அதே தீர்ப்பை அவர் நேற்று வழங்­கி­னார்.

மூன்று பிள்­ளை­களும் திரு­வாட்டி லோவுக்­கும் நாகேஸ்­வ­ரன் முனி­யாண்டி என்­ப­வ­ருக்­கும் பிறந்­த­வர்­கள். திரு­ம­ண­மா­ன­போது திரு நாகேஸ்­வ­ரன் முனி­யாண்டி இந்து சம­யத்தைச் சேர்ந்­த­வ­ராக இருந்­தார். திரு­வாட்டி லோ பௌத்த சம­யத்­தைச் சேர்ந்­த­வர். அவர்­க­ளது பிள்­ளை­கள் அனைவரும் பிறந்­த­போது இந்­துக்­க­ளா­கப் பதிவு செய்­யப்­பட்­ட­னர்.

திரு­வாட்டி லோவை திரு நாகேஸ்­வ­ரன் முனி­யாண்டி

அடிக்­கடி அடித்­துத் துன்­பு­றுத்­தி­ய­தாக அவ­ரது வழக்­க­றி­ஞர் திரு ஏ. ஸ்ரீமு­ரு­கன் தெரி­வித்­தார்.

2019ஆம் ஆண்­டில் திரு நாகேஸ்­வ­ரன் முனி­யாண்டி அடித்­த­தில் காயம் ஏற்­பட்டு

மருத்­து­வ­ம­னை­யில் திரு­வாட்டி லோ அனு­ம­திக்­கப்­பட்­டார்.

அதற்கு முன்பே இஸ்­லா­மிய சம­யத்­துக்கு மாறி­யி­ருந்த திரு நாகேஸ்­வ­ரன் முனி­யாண்டி, திரு­வாட்டி லோ மருத்­து­வ­ம­னை­யில் இருந்­த­போது யாருக்­கும் தெரி­யா­மல் மூன்று பிள்­ளை­க­ளை­யும் இஸ்­லா­மிய சம­யத்­துக்கு மதம் மாற்­றி­னார்.

திரு­வாட்டி லோவும் திரு நாகேஸ்­வ­ரன் முனி­யாண்­டி­யும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் தேதி­யன்று விவா­க­ரத்து செய்­து­கொண்­ட­னர். திரு நாகேஸ்வரன் முனி­யாண்டி போதைப்­பொ­ருள் குற்­றத்­துக்­காக கைது செய்­யப்­பட்டு கிளந்­தான் மாநி­லத்­தில் சிறைத் தண்­டனை அனு­ப­வித்து வரு­கி­றார்.

மணமுறிவுக்குப் பிறகு, தமது பிள்­ளை­க­ளைத் தம்­மு­டன் வைத்­தி­ருக்க திரு­வாட்டி லோ சட்ட ரீதி­யாக நட­வ­டிக்கை எடுத்­தார். ஆனால் கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக வழக்கு

விசா­ரணை தடைப்­பட்­டது.

தமது பிள்­ளை­க­ளைப் பார்க்­கவோ வீட்­டுக்கு அழைத்­துச் செல்­லவோ நல்­வாழ்­வுத் துறை அனு­ம­திக்­க­வில்லை என்று திரு­வாட்டி லோ கூறி­னார்.

தமது பிள்­ளை­களை நல்­வாழ்­வுத் துறை முத­லில் பினாங்­கில் வைத்­தி­ருந்­த­தா­க­வும் பிறகு பெர்­லிஸ் மாநி­லத்­துக்கு அழைத்­துச் சென்­ற­தா­க­வும் அவர் தெரி­வத்­தார். மூன்று பிள்­ளை­க­ளை­யும் 35 வயது திரு­வாட்டி லோவி­டம் ஒப்­ப­டைக்க வேண்­டும் என்று மலே­சிய உயர் நீதி­மன்­றம் நேற்று தீர்ப்­ப­ளித்­ததை அடுத்து, கிட்­டத்­தட்ட மூன்று ஆண்­டு­களில் இரண்­டா­வது முறை­யாக திரு­வாட்டி லோ அவர்­க­ளைச் சந்­தித்­தார்.

தமது 14 வயது இரட்டை மகள்­க­ளை­யும் 10 வயது மக­னை­யும் கெடா மாநி­லத்­தின் ஜிட்­ரா­நக­ரில் சந்­தித்­தார்.

திரு­வாட்டி லோவுக்கு மேற்­கொண்டு எவ்­விதப் பிரச்­சி­னை­யும் தரா­மல் அவ­ரது பிள்­ளை­களை அவ­ரி­டம் சுமு­க­மான முறை­யில், உட­ன­டி­யாக ஒப்­ப­டைக்க வேண்­டும் என்று நல்­வாழ்­வுத் துறை­

யி­டம் மலே­சிய சீனர் சங்­கத்­தின் மக­ளிர் பிரிவு கேட்­டுக்­

கொண்­டது.